தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sukhibhava

கரோனாவை எதிர்கொள்ள நம்ம ஊரு பாட்டிவைத்தியம் இதோ...! - Home Tips

ஹைதராபாத்: கரோனாவை எதிர்கொள்ள தேவையான ஊட்டச்சத்தைப் பெற நமது பாட்டி வைத்தியத்திலிருந்து சில குறிப்புகள் உங்களுக்காக...!

கரோனாவை எதிர்க்கொள்ள நம்மூரு பாட்டிவைத்தியம் இதோ...!
கரோனாவை எதிர்க்கொள்ள நம்மூரு பாட்டிவைத்தியம் இதோ...!

By

Published : Jul 11, 2020, 12:14 AM IST

நாட்டில் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஏழு லட்சத்து 93 ஆயிரத்து 802ஆக அதிகரித்துள்ளது. உயிரிழந்தோரின் எண்ணிக்கை 21 ஆயிரத்து 604 ஆக உயர்ந்துள்ளது. குணமடைந்தோரின் எண்ணிக்கை 4 லட்சத்து 95 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.

எனினும் இதுவரை வைரஸிற்கு எதிரான மருந்துகள் கண்டறியப்படவில்லை. இதற்கிடையில், வைரஸைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் மத்திய, மாநில அரசுகள் தீவிராக களமிறங்கியுள்ளன. மேலும், கரோனா தொற்றுக்கான தடுப்பூசி, மருந்துகள் கண்டுபிடிக்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், வருமுன் காப்போம் என்பதற்கிணங்க எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஆகாரங்களை உண்ண, பருக அரசு அறிவுறுத்தியுள்ளது.

அந்த வகையில், எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க என்ன மாதிரியான உணவுப் பொருள்களை எடுத்துக் கொள்ள வேண்டும் என ஊட்டச்சத்து நிபுணர் சுஜாதா ஸ்டீபன் விளக்குகிறார். அவை வருமாறு:-

  • அதிகாலையில் சூடான கொதிக்கும் நீரில் துளசி, மிளகு, இலவங்கப்பட்டை, இஞ்சி, வெல்லம், மஞ்சள் சேர்த்து குடிக்க வேண்டும். வழக்கமான தேநீருக்கு பதிலாக இந்தச் சாறை குடித்தால், இருமல், சளி, தொண்டையில் அரிப்பு ஆகியவை குணமாகும்.
  • மேலே குறிப்பிட்ட மூலிகை தண்ணீரை குடித்து, சுமார் 30 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்வது அவசியம். இந்த நேரத்தில், போதுமான சூரிய ஒளி உடலால் உறிஞ்சப்படுவதைக் கவனிக்க வேண்டும். யோகா செய்வதும், நடப்பதும் உடலுக்கு நல்லது.
  • தினமும் காலை 8 மணிக்குள் காலை உணவை முடிக்க வேண்டும். உளுந்து அல்லது ராகி மாவில் இருந்து தயாரிக்கப்பட்ட இட்லிகளை காலை உணவுக்கு எடுத்துக்கொள்ள ஏற்றது. அரைத்த கேரட், முளைக் கட்டிய தானியங்களைச் சேர்ந்து உண்ணலாம்.
  • காலை 10.30 மணிக்கு, இந்தப் பருவத்திற்கு உண்டான பழங்களான பப்பாளி, மாதுளை, புளூபெர்ரி போன்றவற்றை உண்ணலாம்.
  • மதிய உணவிற்கு, கீரைகள், பருப்பு வகைகள், புடலங்காய், சுண்டைக்காய், முள்ளங்கி, காலிஃபிளவர், முட்டைக்கோஸ் என சத்தான் காய்கறிகளை சாப்பிடலாம்.
  • சராசரியாக ஒரு மனிதன் 150-200 கிராம் சிக்கன், 75 கிராம் மட்டன், 100 கிராம் மீன், 50 கிராம் பன்னீர் என அசைவம் உண்பவர்கள் எடுத்துக் கொள்ளலாம். சைவம் சாப்பிடுபவர்கள் அதற்கு பதிலாக தினை, கடலை வகைகளை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.
  • மாலையில் உலர் பழங்களை திண்பண்டங்களாகவும், காய்கறி சூப்பை பனாமாகவும் எடுத்து கொள்ளலாம்.
  • இரவில் 7.30 - 8.00 மணிக்கு முன் இரவு உணவைச் சாப்பிடவேண்டும். தானிய வகையில் ரொட்டி செய்து எடுத்துக் கொள்ளலாம். தூங்க படுக்கைக்குச் செல்வதற்கு முன் ஒரு கப் பாலில் ஒரு சிட்டிகை மஞ்சளை விட்டு பருகினால் இன்னும் உடலுக்கு நல்லது.

இதையும் படிங்க...ஒடிசாவின் அரிசி கிண்ணத்தில் பயமுறுத்தும் புற்றுநோய்!

ABOUT THE AUTHOR

...view details