சான் பிரான்சிஸ்கோ : இதுதொடர்பாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. எலிகளுக்கு நடத்தப்பட்ட சோதனையில் அதிக உப்பு மன அழுத்த ஹார்மோனின் அளவை 75 சதவிகிதம் அதிகரிப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அதிக உப்பு நிறைந்த உணவு நமது மன ஆரோக்கியத்தை எவ்வாறு மாற்றுகிறது என்பதைப் புரிந்துகொள்வது நல்வாழ்வை மேம்படுத்துவதற்கான ஒரு முக்கியமான படியாகும்" என்று எடின்பர்க் பல்கலைக்கழகத்தின் இருதய அறிவியல் மைய சிறுநீரக உடலியல் பேராசிரியர் மேத்யூ பெய்லி தெரிவித்துள்ளார்.
"அதிக உப்பு சாப்பிடுவது இதயம், இரத்த நாளங்கள் மற்றும் சிறுநீரகங்களை சேதப்படுத்துகிறது. உணவில் அதிக உப்பு நம் மூளை மன அழுத்தத்தைக் கையாளும் விதத்தையும் மாற்றுவதும் ஆய்வில் தெரியவந்துள்ளது" என்றும் அவர் கூறினார்.