ஐரோப்பா:குடிப்பழக்கத்திற்கு அடிமையாவதால் கல்லீரல் செயலிழப்பு, புற்று நோய் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படும் என கேட்டிருப்போம். ஆனால், அதையும் தாண்டி 'தசை இழப்பு' என்ற ஆபத்து இருப்பதாக கூறுகின்றனர் ஆய்வாளர்கள். அதீத குடிப்பழக்கம் உள்ளவர், அளவாக குடிப்பவர், குடிப்பழக்கமே இல்லாதவர் என ஆண்கள் மற்றும் பெண்களை வகைப்படுத்தி இங்கிலாந்தில் உள்ள University of East Anglia ஆய்வு நடத்தியது.
இங்கிலாந்து நாட்டவர்களிடம் நடத்தப்பட்ட இந்த ஆய்வில், பல தகவல்கள் கிடைத்துள்ளன. அதில், அதீத குடிப்பழக்கத்தின் விளைவு கல்லீரல் இழைநார் வளர்ச்சி, புற்றுநோய் மற்றும் இதய நோய் உள்ளிட்ட பல்வேறு உடல்நலப் பிரச்னைகள்தான் மட்டும்தான் என நினைத்ததற்கு நேர்மாறாக வேறு பல உடல்நலக் கோளாறுகளை வரவழைக்கும் என்ற அதிர்ச்சியான தகவல் தெரியவந்துள்ளது.
ஐரோப்பாவில் உள்ள சுமார் அரை மில்லியன் மக்களை ஒன்றிணைத்து அவர்களின் வாழ்கை முறை, சுகாதாரம் உள்ளிட்டக்கிய பல காரணிகளை முன்நிறுத்தி ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. 37 வயது முதல் 73 வயதிற்கு உட்பட்ட 2 லட்சம் மக்களிடம் நடத்தப்பட்ட இந்த ஆய்வில், நாள் ஒன்றுக்கு புரதசத்து நிறைந்த உணவை எவ்வளவு எடுத்துக்கொண்டார்கள், புகைபிடித்தார்களா உள்ளிட்ட பலவற்றை கூர்ந்து கவனித்து அதில் மாற்றங்களை ஏற்படுத்தினோம்.
மேலும், ஆண்கள் பெண்கள் என இருப்பாலருக்கும் இடையே இந்த ஆய்வு தனித்தனியாக நடத்தப்பட்டது. காரணம் பாலினம் மாறுபடும்போது ஆய்வின் முடிவுகளிலும் மாறுபடு ஏற்படலாம். எனவே இரு பாலருக்கும் தனித்தனியாக ஆய்வு நடத்த தேவையான அனைத்து தரவுகளையும் UK Biobank மூலம் பெறப்பட்டது.
இந்த ஆய்வை மேற்கொள்ள ஆரோக்கியமான உடல் தசை உள்ள ஆண்கள் மற்றும் பெண்களை தேர்வு செய்து, ஆண் ஒருவருக்கு நாள் ஒன்றுக்கு ஒரு யூனிட் ஓயின் மற்றும் பெண் ஒருவருக்கு 2 யூனிட் ஒயின் என குடிக்க கொடுத்து நாள் ஒன்றுக்கு 20 யூனிட் ஒயின் குடிப்பவரோடு ஒப்பிட்டோம். (20 யூனிட் ஓயின் என்பது, 2 பாட்டில் ஒயின் மற்றும் 10 பாட்டில் பீருக்கு சமம்) அப்போது 20 யூனிட் ஒயின் குடித்த நபர் மற்ற நபர்களை விட 4 முதல் 5 சதவீதம் குறைவான தசையை கொண்டிருந்தார். இது இளம் பருவத்தில் இருப்பவர்கள் முதல் முதியோர்களுக்கு இடையே மாறுபடலாம் எனவும் ஆய்வுகள் குறிப்பிடுகின்றன.