சென்னை:பொதுவாக குளிர்காலம் என்றதும் சளி, காய்ச்சல், இருமல் உள்ளிட்ட நோய்கள் வரும் என்பதும், ஆஸ்துமா போன்ற சுவாச பிரச்னைகளால் பாதிக்கப்படுபவர்கள் அதிக கவனமாக இருக்க வேண்டும் என்பதும் நாம் அறிந்ததே. ஆனால், இந்த குளிர்காலத்தில் மாரடைப்பு ஏற்படும் அபாயம் அதிகரிக்கும் என்பதும், கண் சம்பந்தப்பட்ட பிரச்னைகளும் வரும் என்று தெரியுமா?
குளிர்கால இதய ஆரோக்கியம்:ஆம். சமீபத்திய ஆய்வுகளில், குளிர்காலத்தில் மாரடைப்பு ஏற்படும் விகிதம் அதிகரித்துள்ளதாக இருதய நோய் நிபுணர் கூறியுள்ளார். குளிர்காலத்தில் ஏற்படும் அதீத குளிரின் காரணமாக உடலின் ரத்த நாளங்கள் சுருங்கி, ரத்த கட்டுகள் (Blood Clots) உருவாகும். இதன் காரணமாக ரத்த அழுத்தம் அதிகரித்து மாரடைப்பு, பக்கவாதம் போன்றவை ஏற்படும் அபாயம் அதிகமுள்ளதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
வழக்கமான உடற்பயிற்சி, இதய ஆரோக்கியத்தை பாதுகாக்கும் உணவுகள், மிதமான சூட்டில் உணவுகள் உண்ணும் பழக்கம் போன்றவற்றை மேற்கொள்வதன் மூலம் மாரடைப்பு ஏற்படும் அபாயத்தை குறைக்கலாம் என நிபுணர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இது குறித்து இருதய நோய் நிபுணர் விஜய் குமார் கூறுகையில், 'குளிர்காலத்தில் ஏற்படும் மாரடைப்பின் அபாயத்தைக் குறைக்க நடவடிக்கை எடுப்பது இன்றியமையதாதது. குளிர்கால மாரடைப்பு சுற்றுச்சூழல் காரணிகளால் ஏற்படுகிறது.
மேலும், இக்காரணிகளுக்கு ஆஸ்துமா மற்றும் புகைப்பிடிப்பவர்களின் சுவாச நிலைகளை தீவிரமடைய செய்கிறது. சரிவடைந்த வெப்பநிலை இதய செயல்பாடுகளில் சுமையை ஏற்படுத்துகிறது' என்று கூறினார். கான்பூரின் ரீஜென்சி மருத்துவமனையின் இருதய நோய் நிபுணர் அபினித் குப்தா கூறுகையில், 'குளிர்காலத்தில் ரத்த நாளங்கள் சுருங்குவது, உயர் ரத்த அழுத்த நோயாளிகளுக்கு அதிக அளவிலான அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது.