தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sukhibhava

Earthen Pot Health Benefits in Tamil: மண் பானை தண்ணீரைக் குடிப்பதால் கிடைக்கும் 8 ஆரோக்கிய நன்மைகள்.! - மண் பானையில் தண்ணீரை சேமிப்பது எப்படி

இந்தியாவின் பாரம்பரிய பழக்க வழக்கத்தில் ஒன்று, மண் பானையில் தண்ணீரைச் சேமித்து வைத்துக் குடிப்பது. ஆனால் இன்று குளிர்சாதனப் பெட்டிகள் வந்த உடன் மண் பானைகள் காணாமல் போய்விட்டன. இதன் அற்புதமான ஆரோக்கிய நலன்களைத் தெரிந்துகொண்டு மீண்டும் அந்த பழமையை நோக்கிப் பயணிக்க முயற்சியுங்கள்.

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 4, 2023, 6:51 PM IST

சென்னை: ஆரோக்கியம் என்பது நமது வாழ்வின் ஆதாரம். நவீன நாகரீக வளர்ச்சியில் சிக்கிக்கொண்ட நமக்குப் பழமையான வாழ்வியல் முறைதான் ஆரோக்கியத்தின் இருப்பிடம் எனத் தெரியாமல் போய்விட்டது. அந்த வகையில் இன்றைய தலைமுறை மறந்துபோன ஒன்றுதான் மண் பானை தண்ணீரைப் பருகுவது. மண் பானையில் தண்ணீரைச் சேமித்து வைத்துக் குடிக்கும்போது அதனால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் ஏராளம் இருக்கின்றன. இதில் குறிப்பிட்ட சில முக்கியமான ஆரோக்கிய பலன்கள் குறித்துத் தெரிந்துகொள்வோம்.

1. மண் பானையில் நிறைந்துள்ள இயற்கையான குளிர்ச்சி பண்புகள்; மண் பானையில் தண்ணீரைச் சேமித்து வைப்பதன் மூலம் நீரின் இயற்கையான குளிர்ச்சி பண்பு உறுதி செய்யப்படுகிறது. களி மண்ணால் உருவாக்கப்படும் இந்த மண் பானைகளில் உள்ள சிறு, சிறு துளைகள் நீரில் உள்ள வெப்பத்தை இழக்கச் செய்து குளுமையைத் தருகிறது.

2. மண் பானையில் இருக்கும் காரத்தன்மை (Alkaline);நாம் உண்ணும் பெரும்பாலான உணவுகள் உடலில் அமிலமாக மாறி நச்சுகளை உருவாக்குகின்றன. களிமண் இயற்கையில் காரத்தன்மை கொண்டதாக உள்ள நிலையில், இது அமில உணவுகளுடன் தொடர்பு கொள்வது மட்டும் இன்றி, உடலில் ஹைட்ரஜன் திறனைச் சமநிலையில் வைக்கிறது. மேலும், உடலில் அமிலத்தன்மை மற்றும் இரைப்பை தொடர்பான பிரச்சனையைத் தடுக்கிறது.

3. வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது;களிமண் பானையில் சேமித்து வைக்கப்படும் தண்ணீர் எந்தவிதமான இரசாயனங்களும் இல்லாத நிலையில் நீங்கள் தினமும் அதைக் குடிக்கும்போது, உங்கள் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கலாம் மற்றும் தண்ணீரில் தாதுக்கள் இருப்பதால் செரிமானத்தை மேம்படுத்தவும் இது உதவுகிறது.

4. சூரிய ஒளியால் ஏற்படும் பாதிப்புகளுக்குத் தீர்வாகிறது;சுட்டெரிக்கும் கோடை மாதங்களில் சன் ஸ்ட்ரோக் என்பது ஒரு பொதுவான பிரச்சனையாக உள்ளது. களிமண் பானை தண்ணீரைக் குடிப்பது சூரிய ஒளியை எதிர்த்துப் போராட உதவுகிறது. சோர்வு ஏற்படுவதைக் கட்டுப்படுத்துகிறது.

5. தொண்டைக்கு இதமானது;குளிர்சாதனப் பெட்டியில் இருந்து குளிர்ந்த நீரைக் குடிப்பதால் தொண்டையில் அரிப்பு மற்றும் புண் ஏற்படலாம். அது மட்டும் இன்றி, சளி பிடிப்பது, உடல் சூடு அதிகரிப்பது உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் ஏற்படலாம். ஆனால், இந்த களிமண் பானை தண்ணீரை நீங்கள் பருகும்போது அது தொண்டையில் மென்மையாக இரங்கும். தொண்டைக்கு மிதமான குளுமையைக் கொடுப்பதால் சிறியவர்கள், வயது முதிர்ந்தவர்கள் என அனைவரும் இந்த மண் பானை தண்ணீரைக் குடிக்கலாம்.

6. இயற்கையாகவே இருக்கும் சுத்திகரிப்பு பண்பு; களிமண் பானைகள் தண்ணீரைக் குளிர்விக்க மட்டுமல்ல, இயற்கையாகவே தண்ணீரைச் சுத்திகரிக்கவும் பயன்படுகிறது. தண்ணீரில் இருக்கும் கிருமிகளை வடிகட்டி நீரின் இயற்கை பண்பு மாறாமல் அப்படியே வழங்கும். நவீன வாட்டர் ஃபில்டர்களுக்கு எல்லாம் பாட்டன் இந்த மண் பானை.

7. செரிமானத்திற்கு உதவுகிறது;களிமண் பானை தண்ணீரைத் தினமும் குடிப்பது வளர்சிதை மாற்றத்தை அதிகரிப்பது மட்டும் இன்றி, அதில் இருந்து பருகும் தண்ணீரில் அதிகப்படியான தாதுக்கள் இருப்பதால் அது செரிமானத்திற்கும் உதவும்.

8. ஆற்றல் ஏற்றியாக இருக்கும் மண் பானை;களி மண்ணால் தயாரிக்கப்படும் இந்த மண் பானையில் ஏராளமான கனிமங்கள் மற்றும் மின்காந்த ஆற்றல் நிரம்பியுள்ளது. இது உடலுக்கு ஆற்றலை வழங்குகிறது. மேலும், கொளுத்தும் வெயிலால் ஏற்படும் சக்தி இழப்பையும் இது ஈடுசெய்கிறது.

இதையும் படிங்க:Breakfast Salads in Tamil: சுறுசுறுப்பான நாளை பெற வேண்டுமா: காலை உணவில் சாலட் எடுத்துக்கொள்ளுங்கள்.!

ABOUT THE AUTHOR

...view details