சென்னை: தற்போது உள்ள காலக்கட்டத்தில் பெரும்பாலான நபர்கள் சந்திக்கக்கூடிய பிரச்சினையாக உடல் பருமன் உள்ளது. இதை சரி செய்வதற்கு பலரும் டயட்டில் ஈடுபட்டுள்ளனர். டயட் காரணமாக காலை உணவை சாப்பிடாமல் வெறும் வயிற்றில் பழங்களை மட்டும் சாப்பிட்டு வருகின்றனர்.
ஆனால் வெறும் வயிற்றில் எல்லா பழங்களையும் சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். ஆனால் சில பழங்களை வெறும் வயிற்றில் சாப்பிடலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். அப்படியாக என்னென்ன பழங்களை, வெறும் வயிற்றில் சாப்பிடலாம், அதனால் என்ன பலன் என்பதையும் பார்க்கலாம்.
வெறும் வயிற்றில் என்னென்ன பழங்கள் சாப்பிடலாம்: தர்பூசணி பழம், பப்பாளி பழம், அன்னாசி பழம், ஆப்பிள், கிவி, பேரிக்காய் உள்ளிட்ட ஆறு பழங்களை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடலாம். இந்த பழங்களை வெறும் வயிற்றில் சாப்பிடுவதால் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கின்றன.
தர்பூசணி பழம் (Watermelon):சாறு நிறைந்த தர்பூசணி, உடலை குளிர்விக்கவும், புத்துணர்ச்சியாக்கிறது. தர்பூசணி பழத்தில் உள்ள 92 சதவீத நீர், உடலுக்கு ஈரப்பதத்தை அளிக்கிறது. தர்பூசணியில் உள்ள லைகோபீன் இதயம் மற்றும் சருமத்தை பாதுகாக்க உதவுகிறது. இதில் எலட்ரோலைட் இருப்பதால், உடலில் நீரிழப்பு ஏற்படாமல் பாதுகாக்கிறது.
பப்பாளி (Papaya):உடல் எடையை குறைக்கப்பதற்கு உதவும் பப்பாளியில், விட்டமின் ஏ, விட்டமின் சி, விட்டமின் ஈ உள்ளன. பப்பாளியில் உள்ள பப்பெய்ன் மற்றும் சைமோபபைன் நொதிகள், உணவு செரிமானத்திற்கும்,மலச்சிக்கலை தடுக்கவும் உதவுகின்றன.