சென்னை:ஒவ்வொரு பெண்ணின் வாழ்க்கையிலும் மாதவிடாய் என்பது நரக வேதனை தான். உடல் வலி, வயிற்று வலி, உடல் சோர்வு, மூட்டு வலி, அடிக்கடி ஏற்படும் மனநிலை மாற்றம், வாந்தி, மயக்கம், அதிக இரத்தப்போக்கு, மன அழுத்தம், அதிக இரத்தப்போக்கினால் ஏற்படும் இரத்த சோகை போன்றவை நிலைகுலைய செய்யும். இந்த பிரச்சினையைப் போக்க ஒவ்வொரு பெண்ணும் சரிவிகித உணவை பின்பற்ற வேண்டும். சில உணவுமுறைகளை கடைபிடிப்பதன் மூலமாக மாதவிடாயின் போது ஏற்படும் பிரச்சினைகளை சரிசெய்யலாம்.
இலை பச்சை காய்கறிகள் (Green Leafy Vegetables):கீரைகள், புதினா, கொத்தமல்லி, முட்டைகோஸ், பிரக்கோலி, வெங்காய தாள் போன்றவற்றை உண்ண வேண்டும். இவற்றில் உள்ள இரும்பு, பொட்டாசியம், மெக்னீசியம் மற்றும் துத்தநாகம் போன்ற தாதுக்கள் மாதவிடாயின் போது ஏற்படும் இரத்த சோகையை சரி செய்யும். மேலும் மாதவிடாயின் போது ஏற்படும் வலியையும் சரி செய்யும். இந்த காய்கறிகளில் உள்ள மெக்னீசியம் மூளையை அமைதிப்படுத்த உதவுகிறது. இதனால் மாதவிடாயின் போது ஏற்படும் மன அழுத்தத்தையும், மனநிலை மாறுபடுதலையும் போக்கலாம்.
வாழைப்பழங்கள் (Banana): வாழைப்பழத்தில் உள்ள பொட்டாசியம் வயிற்றில் நீர் இருப்பை பராமரிக்க உதவுகிறது. இதனால் மாதவிடாயின் போது ஏற்படும் நீரிழப்பை தவிர்க்கலாம். மேலும் வாழைப்பழத்தில் உள்ள டிரிப்டோபன், செரோடோனின் வெளியீட்டை தூண்டுகிறது. இது மனஇறுக்கம் இல்லாமல் மனது லேசாக இருக்கம்.