சென்னை:மனிதனின் அடிப்படை தேவைகளாக உணவு, உடை, இருப்பிடம் இருந்த நிலையில், தற்போது செல்போன், ஃபிரிட்ஜ், டிவி போன்றவையும் அதில் அடங்கிவிட்டன. தற்போது ஃபிரிட்ஜ் இல்லாத வீடுகளே இல்லை. எந்ததெந்த பொருட்களை ஃபிரிட்ஜில் வைக்கலாம் எந்தெந்த பொருட்களை ஃபிரிட்ஜில் வைக்கக்கூடாது என்ற விழிப்புணர்வு இல்லாமல் எல்லா உணவுப்பொருட்களையும் ஃபிரிட்ஜில் வைக்க துவங்கி விட்டனர்.
தேநீர் முதல் 3 நாட்களுக்கு முன் சமைத்த உணவு வகைகள், பழங்கள், காய்கறிகள் என எல்லாவற்றையும் ஃபிரிட்ஜில் வைக்க துவங்கிவிட்டனர். ஆனால் எல்லா உணவுப்பொருட்களையும் ஃபிரிட்ஜில் வைப்பது ஆபத்தானது என்று உங்களுக்கு தெரியுமா?.. ஃபிரிட்ஜில் வைப்பதால் சில உணவுப்பொருட்களில் உள்ள ஊட்டச்சத்துக்கள் குறையும் என நிபுணர்கள் கூறுகின்றனர். அப்படி எந்தெந்த உணவுப்பொருட்களை ஃபிரிட்ஜில் வைக்கக் கூடாது, அவ்வாறு சேமித்து வைத்தால் அதனால் ஏற்படும் தீமைகள் என்ன என்பதைப் பார்க்கலாம்.
வாழைப்பழம் (Banana): வாழைப்பழங்களை ஃபிரிட்ஜில் வைத்தால் அவை கருப்பு நிறமாக மாறிவிடும். மேலும் அவற்றின் சுவையும் குறைந்துவிடும். ஆகையால் வாழைப்பழங்களை ஃபிரிட்ஜில் வைக்கக்கூடாது. வாழைப்பழங்களை அறை வெப்பநிலையில் வெளியில் வைப்பது சிறந்தது.
பூண்டு (Garlic):பூண்டை குளிர்ந்த வெப்பநிலையில் வைத்தால், அவற்றில் பூஞ்சைகள் ஏற்படும் அபாயம் உள்ளது. ஆகையால் பூண்டை ஃபிரிட்ஜில் வைக்கக்கூடாது.
வெங்காயம் (Onion):வெங்காயத்தை ஃபிரிட்ஜில் வைப்பதால் அதன் இயற்கையான சுவை இழக்கப்படுகிறது. மேலும் விரைவில் அழுகிவிடும். வெங்காயத்தை காற்றோட்டமான அறையில் வைப்பது சிறந்தது.