தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sukhibhava

Home Remedies for Leg Pain in tamil: கால் மற்றும் பாதங்களில் தீராத வலியா.? இந்த வீட்டு வைத்தியமே போதும்.! ட்ரை பண்ணி பாருங்க.! - கால் வலிக்கு பாட்டி வைத்தியம்

கால் மற்றும் பாதங்களில் தீராத வலியா? வீட்டு வைத்தியம் மூலம் அதை எப்படிச் சரி செய்யலாம் என்பதைப் பார்க்கலாம்.

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 23, 2023, 5:46 PM IST

Updated : Sep 23, 2023, 6:04 PM IST

சென்னை: கால் வலி இப்போது பொதுவான ஒரு பிரச்சனையாக அனைவரது மத்தியிலும் பார்க்கப்படுகிறது. குறிப்பாக வீட்டில் உள்ள பெண்கள் அதீத கால் வலி பிரச்சனைக்கு ஆளாகின்றனர். இந்த கால் வலி எதனால் வருகிறது இதற்கு எவ்வாறு தீர்வு காணலாம் என்பதைப் பார்க்கலாம்.

கால், குதிங்கால், மற்றும் பாதங்களில் லேசாக ஆரம்பிக்கும் வலி நாளடைவில் தீராத வேதனையைக் கொடுத்து அல்லாட வைத்து விடும். இந்த கால் வலி ஆண், பெண் இரு பாலருக்கும் பொதுவானதாக இருந்தாலும் பெண்கள் தான் இந்த கால் வலி பிரச்சனையை அதிகம் எதிர்கொள்கிறார்கள் என ஆய்வுகள் குறிப்பிடுகின்றன.

பொதுவாகவே ஆண்களை விடப் பெண்களுக்கு உடலில் ஊட்டச்சத்துக் குறைபாடு காணப்படலாம். இந்த சூழலில் வீட்டில் இருக்கும் பெண்கள் வேலையின் நிமித்தமாக வீட்டிற்குள்ளேயே கிலோ மீட்டர் கணக்கில் நடந்தும், நின்றும் பணியாற்றுகின்றனர். இதனால் அவர்களின் கால் மற்றும் குதிங்கால், பாதம் உள்ளிட்ட பகுதிகளில் அதீத வலி ஏற்படும்.

கால் வலிக்கு மருத்துவ ரீதியான காரணங்கள் பல இருந்தாலும், நடப்பது, கால்களுக்கு ஓய்வு கொடுக்காமல் இருப்பது உள்ளிட்ட காரணங்களால்தான் கால் வலி அதிகம் ஏற்படுகிறது. இதை வீட்டு வைத்தியம் மூலம் எவ்வாறு சரி செய்யலாம் என்பதைப் பார்க்கலாம்.

இதையும் படிங்க:how to look younger: என்றும் இளமையாக தோற்றம் அளிக்க வேண்டுமா.? அப்ப உங்களுக்கு இதுதான் பெஸ்ட்.!

  • ஒரு பாத்திரத்தில் வெதுவெதுப்பான நீரை எடுத்துக்கொள்ளுங்கள். அதில், இரண்டு மேசைக்கரண்டி எப்சம் உப்பைப் போட்டு உங்கள் கால்களை அதற்குள் வையுங்கள். 15 நிமிடம் இவ்வாறு செய்வதன் மூலம் கால் வலி, கால் வீக்கம் உள்ளிட்டவை குறைந்த நிறைவான பலன் தரும்.
  • முக்கால் வாளி வெதுவெதுப்பான நீரில் மூன்று சொட்டு யூகலிப்டஸ் எண்ணெய்யைச் சேர்த்து, உங்கள் கால்களை அதில் வையுங்கள். சுமார் 20 நிமிடமாவது அந்த சூட்டில் காலை வைத்திருக்க வேண்டும். இப்படிச் செய்வதன் மூலம் உடலில் இரத்த ஓட்டம் சீராக வலி குறையும்.
  • உடலின் மற்ற பாகங்களில் கவனம் செலுத்துவது போல், கால்கள் மற்றும் பாதங்களுக்கும் கவனம் செலுத்த வேண்டும். அதற்காகத் தினமும் இரவில் உங்கள் பாதங்களை நன்றாகக் கழுவி, சூடான தேங்காய் எண்ணெய்யைக் கொண்டு மசாஜ் செய்யவும். இப்படி மசாஜ் செய்வதால் கால்களில் உள்ள நரம்புகள் தூண்டப்பட்டு இரத்த ஓட்டம் சீராகும். இதை நீங்கள் தொடர்ந்து செய்வதால் கால்களில் உள்ள வீக்கம் குறையும்.
  • ஒரு தேக்கரண்டி ஆமணக்கு எண்ணெயில் இரண்டு துளி கிராம்பு எண்ணெய்யைக் கலந்து கால் மற்றும் பாதங்களில் மசாஜ் செய்யலாம்.

இதையும் படிங்க:கொசுத் தொல்லை தாங்கலயா? இதைக் கொஞ்சம் ட்ரை பண்ணி பாருங்க.. செம்ம ரிசல்ட் கிடைக்கும்.!

Last Updated : Sep 23, 2023, 6:04 PM IST

ABOUT THE AUTHOR

...view details