தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sukhibhava

'கரோனா காலத்தில் குழந்தைகளுக்கு கண் பரிசோதனை முக்கியம்' - கண் மருத்துவர் - கண்களை எவ்வாறு கவனிப்பது?

கரோனா காலத்தில் குழந்தைகள் ஆன்லைன் கல்வியில் பயில்வதால், அவர்களுக்கு இப்போது கண் பரிசோதனை முக்கியம் என கூறுகிறார் கண் மருத்துவர் மஞ்சு பாட்டே.

Eye checkups are important for Kids
Eye checkups are important for Kids

By

Published : Sep 4, 2020, 8:14 PM IST

கரோனா வைரஸ் பரவல் காரணமாக நாடு முழுவதும் சில தளர்வுகளுடன் ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் பள்ளி, கல்லூரிகள், அலுவலகங்கள் மூடப்பட்டுள்ளன. இதனால் வகுப்புகள் ஆன்லைனில் நடந்துவருகின்றன. இப்படி கணினி மூலம் கல்வி கற்கும் நேரம் அதிகமாயிருக்கு பட்சத்தில், நமது குழந்தைகளின் கண்களை பாதுகாப்பது மிக அவசியமாகிறது. அதனால் நாங்கள் இந்த கரோனா கால கண் பிரச்னை குறித்து கண் மருத்துவர் மஞ்சு பாட்டேவிடம் உரையாடினோம்.

  • குழந்தைகளுக்கு வரும் பொதுவான கண் பிரச்னைகள் என்ன?

ஒளிவிலகல் குறைபாடுகளை குழந்தைகளில் பெருமளவில் சந்திக்கின்றனர். அதுமட்டுமின்றி ஒவ்வாமையாலும் கண் பிரச்னை ஏற்படுகிறது.

  • குழந்தைகளுக்கு எப்போது கண்களைச் சரிபார்க்க வேண்டும்?

குழந்தைகள் மழலையர் பள்ளியில் படிக்கும்போது ஒரு வழக்கமான சோதனை செய்யலாம். இதன் மூலம் குழந்தைகளுக்கு 3 -5 வயது வரை பார்வை தொடர்பான சிக்கல்களை முன்கூட்டியே கண்டறிய முடியும். எந்தவொரு கண் பிரச்னையும் பெற்றோர் அல்லது குழந்தை மருத்துவரால் கண்டறிய முடியாவிட்டால், அவர்கள் உடனடியாக ஒரு குழந்தை கண் மருத்துவரை அணுக வேண்டும்.

  • கண்களை எவ்வாறு கவனிப்பது?

படிக்கும் போதும், எழுதும் போதும் நன்கு ஒளி இருக்கக் கூடிய அறையில் இருக்க வேண்டும். வரையறுக்கப்பட்ட நேரம் மட்டும் டிவி பார்க்க அனுமதிக்கவும். மொபைல் தேவைப்படும் போது மட்டும் கொடுத்தால் போதும்.

  • குழந்தைகளுக்கு ஏற்படும் கண் பிரச்னை எப்படி கண்டறிவது?

குழந்தைகளுக்கு பல விதமான கண் பிரச்னைகள் இருக்கின்றன. நோய்த்தொற்றுகள், வெப்ப அலர்ஜி போன்ற காரணங்களால் அவை தெளிவாக தெரியும். மற்றவை தெரியாது. மற்ற கண் பிரச்னைகளை குழந்தைகள் சொல்லாதவரையோ, நாம் கவனிக்காதவரையோ தெரியாது. அப்படி இருக்கும் பட்சத்தில், குழந்தைகள் எதாவது பொருள்களையோ புத்தகங்களையோ மிக நெருக்கமாக பார்க்கும் போதோ, கண்களை அடிக்கடி தேய்க்கும் போதோ இவற்றை அடையாளம் காணலாம்.

  • கண் பிரச்னை கண்டறிவதில் யாரின் பங்கு அதிகம்?

குழந்தைகளுக்கு ஏற்படும் கண் பிரச்னையை கண்டறிவதில் ஆசிரியருக்கும், பெற்றோருக்கும் அதிக பங்குண்டு. அப்படி கண் பிரச்னைகள் ஏற்பட்ட அறிகுறிகள் இருக்குமாயின், உடனே மருத்துவரை அணுக வேண்டும்.

  • கண் பிரச்னைகள் ஏற்படாமல் இருக்க என்னென்ன உணவுகள் எடுக்கலாம்?

கண்களுக்கு என்று தனியாக சிறப்பு உணவுகள் இல்லை. இருந்தபோதிலும் குழந்தைகளுக்கு சத்தான ஆகாரங்களை கொடுக்க வேண்டும்.

இதையும் படிங்க...பப்ஜி உள்பட 118 சீன செயலிகளுக்கு மத்திய அரசு தடை!

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details