நமது முகத்தில் சிறிது சிறிதான பழுப்பு நிறத்திலான புள்ளிகளை கவனித்திருக்கிறீர்கள் அல்லவா. ஆங்கிலத்தில் ஃப்ரெக்கில்ஸ் என்று இந்தப் புள்ளிகள் அழைக்கப்படுகின்றன. பொதுவாக பிறந்ததிலிருந்தே சிலருக்கு உடம்பில் மச்சம் இருக்கும். அது நிரந்தரமானதாக இருக்கும்.
ஆனால் இந்த ஃப்ரெக்கில்ஸ் பிறப்பில் இருந்து ஏற்படாது. மரபணு காரணமாக அது வந்தாலும் பிறப்பில் இருந்து வராது என்றே ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
இதுகுறித்து தோல் நிபுணரான மருத்துவர் சுஷாந்த் ஷெட்டி கூறுகையில், சென்சிட்டிவான சருமம் இருப்பவர்கள் மற்றும் மரபணு காரணமாக சிலருக்கு இந்த ஃப்ரெக்கில்ஸ் வர வாய்ப்புள்ளது.
உடலில் சென்சிட்டிவாக இருக்கும் இடங்களில் குறிப்பாக வெளிச்சம் (சூரிய வெளிச்சம் உள்பட), படும் இடங்களில் ஃப்ரெக்கில்ஸ் வர வாய்ப்புள்ளது. மைக்ரோவேவ், செல்போன்களில் இருந்து வரும் கதிர்வீச்சுகள் காரணமாகவும் வரலாம்.
இந்தக் கதிர்வீச்சிலிருந்து சருமம் பாதிப்படைவதை தவிர்க்க நமது சருமம் தோலில் சிறிது நிறத்தை மேல்தோல் அடுக்கில் உண்டாக்குகிறது. இது பாதிப்பிலிருந்து சருமத்தை பாதுகாக்கிறது. ஒருமுறை ஃப்ரெக்கில்ஸ் உருவானப் பிறகு, சூரிய ஒளி படும் அளவு, ஹார்மோன் பிரச்னைகள், சருமத்தின் தன்மை ஆகியவை ஃப்ரெக்கில்ஸை அதிகமாகும் வாய்ப்பு உள்ளது. சில நேரங்களில் அரிதாக ஃப்ரெக்கில்ஸ் மறைந்தும் போகலாம்.
ஒரு சிலருக்கு ஃப்ரெக்கில்ஸ் அவ்வளவு பெரிய விஷயமாக இருக்காது. ஆனால் ஒரு சிலருக்கு அது பெரிய விஷயமாக தெரியலாம். இதிலிருந்து விடுதலை பெற மருத்துவர் சுஷாந்த் ஷெட்டி கூறும் வழிமுறைகளை இங்கு காணலாம்.
சன் ஸ்கிரீன் கிரீம்கள்:
சென்சிட்டிவான சருமத்தை கொண்டவர்கள் வெளியில் செல்லும்போது, சன்ஸ்கிரீன் கிரீம்களை பூசிவிட்டு செல்லலாம். இல்லையென்றால் முகத்தை மறைத்துவிட்டு செல்லலாம். நல்லதொரு எஸ்பிஎஃப் இருக்கும் சன்ஸ்கிரீன் (35-40) கிரீமை பயன்படுத்தலாம்.
அவ்வப்போது வெளியே செல்லும்போது குடை எடுத்து செல்லலாம். இப்படி செய்வதால் முகத்தில் இருக்கும் ஃப்ரெக்கில்ஸை சரிசெய்யமுடியாவிட்டாலும், இனி அவை வருவதை தவிர்கலாம்.