தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sukhibhava

சொக்க வைக்கும் ஜூவல்லரி.. அமேசான், பிளிப்கார்டில் அதிரடி ஆஃபர் சேல்.! - பிளிப்கார்ட் ஆஃபரில் ஃபேஷன் ஜூவல்லரிகள் விலை

அமேசான், பிளிப்கார்ட் அதிரடி ஆஃபர் சேல் நடைபெற்று வரும் நிலையில் பெண்கள் தங்களுக்கான ஃபேஷன் ஜூவல்லரிகளை வாங்க இதுதான் சரியான நேரம்.

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 12, 2023, 4:59 PM IST

Updated : Oct 12, 2023, 5:45 PM IST

சென்னை: ஆன்லைன் விற்பனையின் அப்பாடக்கர்களான அமேசான் மற்றும் பிளிப்கார்ட் நிறுவனங்கள் பண்டிகை கால தள்ளுபடி விற்பனை செய்து வருகின்றனர். இந்நிறுவனங்களின் பொருள் பட்டியலில் இல்லாத பொருட்களே இல்லை என்ற நிலையில் பிரபலமான மொபைல் நிறுவனங்களின் ஃபோன்கள் மற்றும் மின்சாதன பொருட்கள் உள்ளிட்ட அனைத்தும் 90 சதவீதம் தள்ளுபடியில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

அந்த வகையில் பெண்களுக்கான தேடல் என்றும் ஆடைகள், ஃபேஷன் ஜூவல்லரிகள் உள்ளிட்டவற்றின் மீதுதான் அதிகமும் இருக்கும். அந்த வகையில் அமேசான் மற்றும் பிளிப்கார்ட் நிறுவனங்கள் ஃபேஷன் ஜூவல்லரிகளுக்கு சுமார் 90 சதவீதத்திற்கும் மேல் தள்ளுபடி விற்பனை செய்து வருகின்றன.

ஃபேஷன் ஜூவல்லரிகள் என்னென்ன இருக்கு; ஃபேஷன் ஜூவல்லரிகள் என பார்த்தோம் என்றால், கம்மல், வளையல், செயின், நெக்ளஸ், சிகை அலங்காரப் பொருட்கள், மோதிரம் உள்ளிட்ட அனைத்தும் கிடைக்கின்றன. இதில் ஸ்டோன் வர்க் ஃபேஷன் ஜூவல்லரிகள், கோல்டன் கலர் ஃபேஷன் ஜூவல்லரிகள், கைவினை ஃபேஷன் ஜூவல்லரிகள் என அடுக்கிக்கோண்டே போகலாம். கண்கவர் வண்ணங்களில் பெண்களின் மனதை கொள்ளையடிக்கும் அளவிற்கு உள்ள ஃபேஷன் ஜூவல்லரிகள் மிக குறைந்த விலையில் இந்த ஆஃபர் சேலில் கிடைக்கிறது.

அமேசான் மற்றும் பிளிப்கார்ட் இரண்டு நிறுவனங்களின் விற்பனைக்கான இணையதளப் பக்கத்தில் ஏராளமான ஃபேஷன் ஜூவல்லரிகளின் புகைப்படங்கள், அதன் சரியான விலை மற்றும் ஆஃபர் விலை என அனைத்தும் கொடுக்கப்பட்டுள்ள நிலையில் இரண்டிலும் ஃபேஷன் ஜூவல்லரிகளின் டிசைன் மற்றும் தரத்தில் வேறுபாடுகள் உள்ளன. குறிப்பாக பிளிப்கார்டில் ஸ்டோன் வர்க் நிறைந்த கலர்ஃபுல்லான ஃபேஷன் ஜூவல்லரிகளை பார்க்க முடிகிறது. அதேபோல அமேசானிலும் ரிச் லுக் ஃபேஷன் ஜூவல்லரிகளை பார்க்கமுடிகிறது.

விலை குறித்த விவரம் இங்கே;சாதாரணமாக பெண்களின் ஃபேஷன் ஜூவல்லரிகள் விலை குறைந்த பட்சம் ஆயிரம் ரூபாயாகவாவது இருக்கும். அந்த அடிப்படையில் பார்த்தால் அமேசான் மற்றும் பிளிப்கார்ட் நிறுவனங்களின் விலைபட்டியலில் இடம் பிடித்துள்ள ஃபேஷன் ஜூவல்லரிகள் அதிகமும் ஆயிரத்திற்கும் குறைவாகவே உள்ள. தீபாவளி பண்டிகைகால தள்ளுபடி விற்பனையை ஒட்டி, ரூ.2000 மதிப்பிலான ஃபேஷன் ஜூவல்லரிகள் 200 ரூபாய், ரூ.1500 மதிப்பிலான ஃபேஷன் ஜூவல்லரிகள் 150 ரூபாய் என அதிரடி ஆஃபர் சேல் விற்பனை நடைபெற்று வருகிறது. இந்த நேரத்தை பயன்படுத்தி உங்களுக்கான ஃபேஷன் ஜூவல்லரிகளை வாங்குங்கள், பணத்தை மிச்சப்படுத்துங்கள்.

கடந்த 8ஆம் தேதி நள்ளிரவு தொடங்கிய அமேசான் மற்றும் பிளிப்கார்டின் தள்ளுபடி விற்பனை வரும் 15ஆம் தேதியுடன் முடிவடையவுள்ள நிலையில் இந்த நேரத்தில் உங்களுக்கான பர்ச்சைஸை தொடங்குங்கள்.

இதையும் படிங்க:Right Footwear Health Benefits In Tamil: காலணிகளைத் தேர்வு செய்வதில் கவனம் கொள்ளுங்கள் : ஏன் தெரியுமா?

Last Updated : Oct 12, 2023, 5:45 PM IST

ABOUT THE AUTHOR

...view details