தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sukhibhava

உடலின் கெட்ட கொழுப்பை குறைக்கும் வால்நட்ஸ்

தினமும் வால்நட்ஸ் எடுத்துக்கொள்வதால், உடலில் உள்ள கெட்ட கொழுப்பு குறையும் என மருத்துவ வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். சில ஆய்வுகளும் வால்நட்ஸ் இதய நோய்களை தடுக்கும் வல்லமை கொண்டது என்று தெளிவுப்படுத்தி இருக்கிறது.

Walnuts, வால்நட்ஸ் பயன்கள், bad cholesterol, கெட்ட கொழுப்பு, கொழுப்பு குறைய, முடி வளர, ldl, ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட் அமிலம், how to develop eq  omega 3, ஆரோக்கிய குறிப்பு, வால்நட்ஸ், வால்நட்ஸ் எவ்வாறு சாப்பிடலாம்
வால்நட்ஸ்

By

Published : Sep 9, 2021, 6:51 PM IST

Updated : Sep 9, 2021, 7:32 PM IST

ஹைதராபாத்: அமெரிக்கன் ஹார்ட் அசோசியேசன் வெளியிட்ட ஆய்வறிக்கையில், தினமும் அரை கப் வால்நட்ஸ் எடுத்துக்கொள்ளும் நபர்களுக்கு, குறைந்த அடர்த்தி கொண்ட கொழுப்புப் புரதம், அதாவது கெட்ட கொழுப்பு என்று கூறப்படும் எல்டிஎல் (LDL) குறைவாக காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல முந்தைய ஆய்வுகளும், வால்நட்ஸ் சாப்பிடுவதால் இருதய ஆபத்து காரணிகளை குறைக்கலாம் என்று தெரிவிக்கின்றன. உதாரணமாக, 2019ஆம் ஆண்டின் மெட்டா பகுப்பாய்வு, அதிக வால்நட்ஸ் உட்கொள்வதால் இதய நோயால் ஏற்படும் இறப்புகளை குறைக்கலாம் என சுட்டிக்காட்டியுள்ளது.

வால்நட்ஸில் உள்ள சத்துகள்

நீங்கள் உட்கொள்ளும் ஒவ்வொரு 100 கிராம் வால்நட்ஸில் என்னென்ன சத்துகள் உள்ளன. அவை கீழ்வருமாறு.

  • கொலஸ்ட்ரால் – 0 கிராம்
  • சோடியம் – 2 மில்லி கிராம்
  • பொட்டாசியம் – 441 மில்லி கிராம்
  • புரதச்சத்து – 15 கிராம்
  • வைட்டமின் சி - 2%
  • கால்சியம் - 9%
  • இரும்பு - 16%
  • வைட்டமின் டி - 0%
  • வைட்டமின் பி - 6.25%
  • கோபாலமின் - 0%
  • மெக்னீசியம் - 39%

வால்நட்ஸ் பயன்கள்

  1. இந்த வால்நட்ஸில் உள்ள புரதச்சத்து, வைட்டமின் சத்துக்கள் அனைத்தும் ரத்தத்தில் கலந்து மூளையின் ஆற்றலை நன்றாக செயல்படுத்துகிறது
  2. வால்நட்டில் உள்ள ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட் அமிலம் ஞாபக மறதியை போக்குவதுடன் நமது நினைவு திறனை அதிகரிக்க உதவுகிறது
  3. தினமும் 5 வால்நட்ஸை பெண்கள் சாப்பிடுவதன் மூலம் மார்பக புற்று நோய் வராமல் பாதுகாக்கும்
  4. வால்நட்ஸ் கணைய புற்றுநோயின் அபாயத்தைக் குறைக்கிறது
  5. உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கலாம்
  6. வால்நட்ஸில் உள்ள மெலட்டோனின் (Melatonin) என்னும் ஊட்டச்சத்து நமது மூளைக்கு நல்ல ஒய்வு தந்து நல்ல தூக்கத்தை கொடுக்கும்
  7. வால்நட்ஸ் உடல் வறட்சியை போக்கும், உடல் தோல் பகுதியை எப்பொழுதும் ஈரப்பதத்துடன் வைத்துக்கொள்ளும்
  8. நரம்பு சம்பந்தப்பட்ட நோய்களில் இருந்து விடுதலை கிடைக்கும்.
  9. இதிலுள்ள பயோடின் எனும் வைட்டமின் பி7, தலைமுடியின் வலிமையை அதிகரித்து, தலைமுடி உதிர்வதை குறைத்து, முடியின் வளர்ச்சியை அதிகரிக்கும்.
  10. இவ்வளவு சத்துக்கள் சிறிய அளவிலான வால்நட்ஸில் நிறைந்துள்ளது என்றால் பாருங்களேன். அப்படியெனில் அந்த வால்நட்ஸை தினமும் 5 சாப்பிட்டால் எவ்வளவு நன்மை கிடைக்கும் என்று யோசித்துப் பாருங்கள்.

வால்நட்ஸ் சாப்பிடும் முறை

வால்நட்ஸ் போன்ற பருப்புகளை முதல் நாள் இரவே ஊற வைத்து அல்லது குறைந்தது நான்கு அல்லது எட்டு மணி நேரம் ஊறவைத்து உண்பது பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது என்று நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.

காலை உட்கொள்வதால் கிடைக்கும் நன்மைகள்

வாக்நட்ஸ் பருப்புகளை ஊற வைக்கும்போது வால்நட்ஸ் பருப்பின் தோலில் உள்ள டானின்கள் எனப்படும் ஒரு கலவையை நீக்குவதற்கு இந்த முறை உதவுகிறது. இந்தத் டானின்கள் நமது உடலில் குளுக்கோஸ் மற்றும் ரத்த அழுத்தத்தை குறைத்தல் போன்ற பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை தடுக்கும் பாலிஃபீனால்கள் ஆகும்.

ஆனால் பச்சை வால்நட்ஸ் பருப்புகள் அல்லது எந்த ஒரு விதைகளிலும் உள்ள டானின்கள், ஊட்டச்சத்து எதிர்ப்பு பண்புகளை கொண்டுள்ளன. மேலும் இது இரும்பு போன்ற சில ஊட்டச்சத்துக்கள் உறிஞ்சப்படுவதை தடுக்கவும் உதவுகிறது.

இந்த வால்நட்ஸ் பருப்புகளை ஊற வைப்பதன் மூலம் அதன் சருமத்தில் இருக்கும் அழுக்கு, தூசி மற்றும் எச்சங்களை நீக்க உதவுகிறது.

இது பைடிக் அமிலத்தின் மூன்றில் ஒரு பகுதியை நீக்க உதவுகிறது. இதனால் துத்தநாகம், இரும்பு, கால்சியம், மெக்னீசியம் போன்ற தாதுக்கள் நமது உடலில் உறிஞ்சுவதை ஊக்குவிக்க உதவுகிறது.

ஊறவைக்கும் வால்நட்ஸ் பருப்புகள் எளிதில் மெல்ல கூடியது என்பதால், இதன் செரிமானமும் எளிதாக நடக்கிறது. ஊற வைப்பதால் வால்நட்ஸ் பருப்புகளை குறைவான ஆஸ்ட்ரிஜென்டாக மாற்றுகிறது.

Last Updated : Sep 9, 2021, 7:32 PM IST

ABOUT THE AUTHOR

...view details