சென்னை: சமீப காலமாக நடுத்தர வயது முதல் முதியவர்கள் வரை என எல்லா வயதினருக்கும் ஞாபக மறதி பிரச்சினை அதிகரித்துக் கொண்டே வருகிறது. அந்த வகையில் அமெரிக்கரிகாவில் ஆறு மில்லியனுக்கும் அதிகமான மக்களுக்கு டிமென்ஷியா எனப்படும் ஞாபக மறதி இருப்பதாக அல்சைமர்ஸ் அசோசியேஷன் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. காலப்போக்கில் முதியோர்களின் எண்ணிக்கை அதிகரித்து, 2050 ஆம் ஆண்டில் டிமென்ஷியாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 13 மில்லியனாக உயரும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
டிமென்ஷியாவைக் கட்டுப்படுத்த ஆய்வு:இந்த நிலையில் தினமும் ஸ்ட்ராபெர்ரி சாப்பிடுவது ஞாபக மறதி அபாயத்தைக் குறைக்குமா என சின்சினாட்டி பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் ஒரு ஆய்வினை மேற்கொண்டனர். 12 வாரங்கள் நடைபெற்ற ஆய்வில், பாதி பேருக்கு ஸ்ட்ராபெர்ரி பொடியினை பெற்றனர். மற்றவர்களுக்கு மருந்துப்போலி (Placebo) வழங்கப்பட்டது. லேசான அறிவாற்றல் குறைபாடு இருப்பதாகக் கூறிய அதிக எடை கொண்ட பங்கேற்பாளர்களை ஆய்வாளர்கள், ஸ்ட்ராபெர்ரி சாப்பிடுவதை தவிர்க்குமாறு கூறினர்.
ஆய்வின் சோதனை:அதே நேரத்தில் மற்ற பங்கேற்பாளர்கள் ஒரு கப் ஸ்ட்ராபெர்ரிக்கு சமமான உணவு அதாவது, ஒரு கப் ஸ்ட்ராபெர்ரிக்கு சமமான அளவு ஸ்ட்ராபெர்ரி பொடியினை சாப்பிட்டனர். இதனை அடுத்து பங்கேற்பாளர்களின் நீண்ட கால நினைவாற்றல், மனநிலை மற்றும் வளர்சிதை மாற்றம் போன்றவற்றை ஆராய்ச்சியாளர்கள் கண்காணித்தனர். ஸ்ட்ராபெர்ரி பொடியினை சாப்பிட்ட பங்கேற்பாளர்கள் (word list learning test) சொல் பட்டியலை கற்றல் சோதனையில் சிறப்பாக செயல்பட்டனர்.