சென்னை:தண்ணீர் என்பது இன்றியமையாத ஒன்று. சுற்றுப்புறம் மற்றும் உடல் வலுவைப் பொருத்து ஒரு மனிதனால் உணவின்றி 40 நாட்கள் கூட வாழ முடியும். ஆனால், நீரின்றி 2 நாட்கள் கூட வாழ முடியாது. மனிதன் மட்டுமின்றி அஃறிணை உயிர்களுக்கும், ஏன் தாவரங்களுக்கும் நீர் இன்றியமையாத ஒன்று. 20 கிலோ எடைக்கு ஒரு லிட்டர் தண்ணீர் என்ற விதத்தில் தண்ணீர் குடிக்க வேண்டும். உதாரணத்திற்கு 60 கிலோ எடையுள்ள மனிதன் ஒரு நாளைக்கு 3 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
தரையில் சம்மணங்கால் போட்டு அமர்ந்து உணவருந்த வேண்டும் எனச் சங்க இலக்கியங்கள் கூறுகின்றன. மேலும், நாற்காலியில் அமர்ந்தோ அல்லது மெத்தையில் அமர்ந்தோ சாப்பிடக்கூடாது என்றும் கூறப்பட்டுள்ளது. அதுபோல, நின்று கொண்டே தண்ணீர் குடிக்கக்கூடாது என்றும் கூறப்படுகிறது. ஏன் நின்று கொண்டு தண்ணீர் குடிக்கக் கூடாது? அப்படிக் குடிப்பதால் ஏற்படும் பாதிப்புகள் என்ன? எப்படி தண்ணீர் குடிக்க வேண்டும் என்பதைப் பார்க்கலாம்.
நின்று கொண்டே தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் பாதிப்புகள்:நின்று கொண்டே தண்ணீர் குடிப்பதால் உடலில் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படும். நின்று கொண்டே தண்ணீர் குடிக்கும் போது தண்ணீர் வடிகட்டப்படாமல் அடி வயிற்றுக்குள் சென்று விடும். இதனால் அசுத்தங்கள் சிறுநீரகப்பையிலேயே படிந்து சிறுநீரக பாதிப்பையும் ஏற்படுத்துகின்றன.