திரையிலிருந்து வரும் ஒளி, ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கங்கள், வாழ்க்கை முறை நமது சருமத்தின் ஆரோக்கியத்தை பாதிக்கும். இதன் மூலம் முகம் பொலிவிழந்து, வயதான தோற்றத்தை கொடுக்கும்.
இதனையடுத்து வயதாகும் பாதிப்பை குறைக்கும் வழியில் நாம் ஈடுபட வேண்டும். இதன் மூலம் முகத்தில் உள்ள கோடுகள், சுருக்கங்களை தடுக்க முடியும்.
வயதான தோற்றத்தை குறைக்கும் சிகிச்சையை எப்போது தொடங்க வேண்டும்?
வயதான தோலானது பெரும்பாலும் தொய்வான, சுருக்கமான சருமமாக வகைப்படுத்தப்படுகிறது. புரோஃபிலோ (Profhilo) எனப்படும் தோல் மறுவடிவமைப்பு சிகிச்சை மூலம் முதிர்ச்சியாக இருக்கும் சருமத்தை மீண்டும் புத்துணர்ச்சியாக மாற்ற முடியும.
இந்த சிகிச்சை ஹையலுரோனிக் அமிலத்தை அடிப்படையாகக் கொண்டு செயல்முறைபடுத்தப்படுகிறது. இது சருமத்தில் கோலாஜன் மற்றும் எலாஸ்டின் உற்பத்தியை அதிகரிக்கிறது. இதன் காரணமாக சருமம் எலாஸ்டிக் தன்மையுடன் உறுதியாகவும் இருக்கும்.
ஹையலுரோனிக் அமிலம் இயற்கையாக சருமத்தில் காணப்படுகிறது. இந்த அமிலம் சருமத்தில் உள்ள ஈரப்பதத்தை தக்க வைக்க உதவும். நாம் முதிர்ச்சி அடையும்போது, நமது சருமம் ஹையலுரோனிக் அமிலத்தை இழக்கிறது. அதனால் சருமம் உலர்ந்து மந்தமாக காணப்படுகிறது.
முதிர்ச்சி அடைவதிலிருந்து சருமத்தை பாதுகாக்க பல வழிமுறைகள் இணையத்தில் கொட்டிக்கிடக்கின்றன. 20 வயது இறுதியில் அல்லது 30 வயது தொடக்கத்திலேயே பலரும் ஆன்டி -ஏஜிங் சிகிச்சை முறையை தொடங்க வேண்டும்.
முகத்தில் உள்ள சுருக்கங்களை அகற்ற பல பொருள்களை மக்கள் பயன்படுத்துகின்றனர். இந்தப் பொருள்கள் பிற்காலத்தில் சுருக்கங்கள் வராமல் பாதுகாக்குமே தவிர, தற்போது இருக்கும் சுருக்கங்களை மறைய வைக்க உதவாது.
இதனால் சுருக்கங்கள் வருவதற்கு முன்பே ஆன்டி- ஏஜிங் சிகிச்சையை எடுத்துக்கொண்டால் அதிக பாதுகாப்பு கிடைக்கும். தினந்தோறும் சருமத்தை பாதுகாக்கும் வழிமுறைகள பின்பற்ற நல்ல தோல் மருத்துவர் அல்லது சரும நிபுணரை சந்தியுங்கள். அவர்கள் கூறும் வழிமுறைகளை பின்பற்றுங்கள்.
அவர்கள் உங்கள் சருமத்தில் இருக்கும் பிரச்சினைகளை கண்டறிந்து அதற்கேற்றவாறு சிகிச்சை அளிப்பார்கள். அதில் முக்கியமாக கீழிருக்கும் பொருள்களும், வழிமுறைகளும் அடங்கும்.
சூரிய பாதுகாப்பு: