தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sukhibhava

கொடூரமான செய்திகளை விரும்புகிறீர்களா...அதிர்ச்சி தரும் ஆய்வு முடிவுகள்

விபத்து, அழிவு, தாக்குதல் செய்திகளைத் தொடர்ந்து பார்க்க வேண்டும் என்ற அதீத ஆசை கொண்டவர்கள் மன அழுத்தம், கவலை மற்றும் உடல் நலக்குறைவால் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என ஆய்வுகள் தெரிவிக்கிறது.

கொடூரமான செய்திகளை விரும்புகிறீர்களா...அதிர்ச்சி தரும் ஆய்வு முடிவுகள்
கொடூரமான செய்திகளை விரும்புகிறீர்களா...அதிர்ச்சி தரும் ஆய்வு முடிவுகள்

By

Published : Aug 25, 2022, 8:44 PM IST

புதுடெல்லி: கடந்த இரண்டு ஆண்டுகளில், கோவிட் தொற்றுநோய் அழிவுகள், முதல் ரஷ்யா உக்ரை தாக்குதல்கள், பெரிய அளவிலான போராட்டங்கள், துப்பாக்கிச் சூடு மற்றும் பேரழிவு சம்பவங்கள் என பல்வேறு கவலையளிக்கும் உலகளாவிய நிகழ்வுகளுக்கு மத்தியில் நாம் வாழ்ந்து வருகிறோம். பலருக்கும் இதுகுறித்த செய்திகளைப் படிப்பது பிடிக்கும். இதுபோன்ற செய்திகளை தொடர்ந்து விரும்பி பார்ப்பது, படிப்பது, நம்மை தற்காலிகமாக சக்தியற்றதாகவும், மன உளைச்சலுக்கும் ஆளாக்கும்.

ஹெல்த் கம்யூனிகேஷன் இதழில் வெளியிட்டுள்ள இந்த ஆய்வில் பங்கேற்றவர்களிடம் அவர்கள் எத்தகைய செய்திகளை விரும்புகிறார்கள் என்றும், சமீப காலத்தில் அவர்கள் எதிர்கொண்ட உடல்நலக்குறைவுகள் பற்றியும் கேள்விகள் கேட்கப்பட்டது. அவர்கள் எவ்வளவு முறை மன அழுத்தம் மற்றும் பதட்டம் மற்றும் சோர்வு, உடல் வலி, மோசமான செறிமான பிரச்சினை மற்றும் இரைப்பை குடல் பிரச்சினைகள் போன்ற உடல் உபாதைகளை அனுபவித்தார்கள் என்பது குறித்தும் கேட்கப்பட்டது.

கணக்கெடுக்கப்பட்டவர்களில் 16.5% பேர் விபத்து, கொலை, தாக்குதல், கொள்ளை போன்ற கொடூரமான செய்திகளை விரும்பி படிப்பதாக ஆய்வு முடிவுகள் வெளிப்படுத்தின. இத்தகைய நபர்கள் அடிக்கடி செய்திகளில் மூழ்கி கிடந்துள்ளனர். இது அவர்களின் குடும்பம் மற்றும் நண்பர்களுடனான நேரத்தை சீர்குலைத்தன, பள்ளி அல்லது வேலையில் கவனம் செலுத்துவதை கடினமாக்கியது, மேலும் அமைதியின்மை மற்றும் தூக்கமின்மைக்கு பங்களித்தது.

கடந்த மாதத்தில் மனநலம் அல்லது உடல் நோய் அறிகுறிகளை எவ்வளவு அனுபவித்தார்கள் என்று கேட்டபோது, 73.6% பேர் கடுமையான உடல்நலக் கோளாறுகள், கொஞ்சம் மனநலக் கோளாறுகள் இருப்பதாக தெரிவித்துள்ளனர். கடுமையான செய்திகளை விரும்புபவர்கள் அடிக்கடி உடல் உபாதைகளை அனுபவிப்பதாகக் கூறியுள்ளனர்.

கடினமான செய்திகளை விரும்புவது தங்கள் மன ஆரோக்கியத்தில் பாதகமான விளைவுகளை ஏற்படுத்துவதாக உணர்ந்தால், தனிநபர்கள் தங்கள் செய்திகள் பார்ப்பதை நிறுத்தலாம் அல்லது குறைக்கலாம் என்று ஆராய்ச்சி கூறுகிறது. "உதாரணமாக, COVID-19 இன் பரபரப்பான கவரேஜில் தொடர்ந்து கவனம் செலுத்துவதால், அவர்களின் மன ஆரோக்கியத்தில் ஏற்படும் பாதகமான விளைவுகள் குறித்து விழிப்புணர்வோடும் அக்கறையோடும் இருந்த நபர்கள், மனநலம் சார்ந்த முடிவை எடுப்பதாக அறிவித்தனர்.

மேலும் செய்தித் துறை எவ்வாறு இத்தகைய சிக்கலைத் தூண்டுகிறது என்பது பற்றிய விரிவான விவாதத்தின் அவசியத்தையும் இந்த ஆய்வு வலியுறுத்துகிறது. வெளியிடும் செய்திகள், எதிர்கொள்ளும் பொருளாதார அழுத்தங்கள், தொழில்நுட்ப முன்னேற்றங்கள் மற்றும் 24 மணிநேர செய்தி சுழற்சி ஆகியவை செய்தி நுகர்வோரின் கவனத்தை ஈர்க்கும்.செய்திக்குரிய கதைகளைத் தேர்ந்தெடுப்பதில் கவனம் செலுத்த பத்திரிகையாளர்கள் ஊக்குவிக்கப்படுகின்றனர் என்கிறார் ஆய்வாளார் மெக்லாலின்.

எனவே, எங்கள் ஆய்வின் முடிவுகள், செய்தி ஊடகங்கள் எதிர்கொள்ளும் வணிக அழுத்தங்கள் ஆரோக்கியமான ஜனநாயகத்தை பராமரிக்கும் இலக்கிற்கு தீங்கு விளைவிப்பதில்லை. தனிநபர்களின் ஆரோக்கியத்திற்கும் தீங்கு விளைவிக்கும் என்பதை வலியுறுத்துகின்றன. இந்த ஆய்வின் முடிவில் சிக்கல் நிறைந்த செய்தி நுகர்வுக்கும் மன மற்றும் உடல் நலக்குறைவுக்கும் இடையே சரியான தொடர்பை ஆசிரியர்களால் விளக்க முடியவில்லை.

இதையும் படிங்க:குழந்தைகளை குறிவைக்கும் தக்காளி காய்ச்சல்... லான்செட் எச்சரிக்கை...

ABOUT THE AUTHOR

...view details