தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sukhibhava

இணையத்தை தெறிக்கவிடும் தீபாவளி போனஸ் மீம்ஸ்! - Diwali bonus memes viral in social media

Diwali Bonus Memes: தீபாவளிக்கு இன்னும் ஒரு நாளே இருக்கும் நிலையில் பல கம்பெனிகளில் இன்னும் தீபாவளி போனஸ் வழங்காததை சுட்டிக்காட்டும் விதமாக இணையத்தில் வைரலாகும் மீம்ஸ்கள் சிலவற்றை இங்கே பார்க்கலாம்..

தீபாவளி போனஸ் மீம்ஸ்
தீபாவளி போனஸ் மீம்ஸ்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 10, 2023, 5:13 PM IST

Updated : Nov 10, 2023, 5:30 PM IST

சென்னை:தீபாவளி என்றாலே ஆட்டம், பாட்டம் கொண்டாட்டம் தான். அப்படியான தீபாவளியை வரவேற்காத ஆட்களே இல்லை. 90'S கிட்ஸ் முதல் 2K கிட்ஸ் வரை என எல்லாருக்கும் தீபாவளி சந்தோசத்தை அள்ளித் தருகிறது. புதுத் துணி, ரகரகமாய் பட்டாசு, விதவிதமாய் பலகாரங்கள் என வருடத்திற்கு ஒருமுறை வரும் தீபாவளிக்காக காத்திருக்காத ஆட்களே இல்லை.

குழந்தைகள் புத்தாடைக்கும், பட்டாசுகளுக்கும் காத்திருக்கிறார்கள் என்றால், வேலைக்கு செல்பவர்கள் போனஸ்காக காத்திருப்பர். குறிப்பாக திருப்பூர் போன்ற தொழில் நகரங்களில் வேலை செய்யும் தொழிலாளர்கள், நடுத்தர குடும்பங்கள், இந்த தீபாவளி போனஸை நம்பி பல்வேறு திட்டங்களை தீட்டி வைத்திருப்பர்.

நம்ம ஊரில் இப்போது ஒரு பழக்கம் வந்துவிட்டது. யாரையாவது கலாய்க்க வேண்டுமானாலும் அல்லது எதாவது ஒன்றை நிறைவேற்ற வேண்டுமானாலும் அல்லது விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டுமானாலும் அதற்காக மீம்ஸ்களை உருவாக்கி, இணையதளத்தில் உலா விடுகின்றனர். இந்த நிலையில் தீபாவளிக்கு இன்னும் ஒரு நாளே இருக்கும் பட்சத்தில், பல கம்பெனிகளில் தீபாவளி போனஸ் இன்னும் தரவில்லை. இதை சுட்டிக்காட்டும் விதமாக உருவான தீபாவளி போன்ஸ் மீம்ஸ்கள், சமூக வலைத்தளங்களை ஆக்கிரமித்து விட்டன. அப்படியாக இணையத்தில் அதிகமாக, வைரலான மீம்ஸ்களை பார்க்கலாம்..

தீபாவளி போனஸ் மீம்ஸ்

இந்த மீம் ஊழியர், ஓனரிடம் பேசுவது போல் அமைந்துள்ளது. தீபாவளி போனஸை எதிர்பார்த்து, ஊழியர் மேனஜரிடம், "தீபாவளி போனஸ் சம்பளத்துடன் வருமா, இல்லை சம்பளம் போடுறதுக்கு முன்னாடியே வந்திடுமா" என்று கேட்கிறார். அதற்கு மேனஜர் தீபாவளிக்கு லீவும் கிடையாது, இதில் போனஸும் கிடைக்காது என்று கூறுவது போல் அமைந்துள்ளது.

தீபாவளி போனஸ் மீம்ஸ்

ஊழியர் ஓனரைப் பார்த்து, தீபாவளி வர இன்னும் ஒருநாளே உள்ளது. இன்னும் தீபாவளி போனஸ் வரவில்லையே என்று கேட்கிறார். தீபாவளி போனஸை வாங்காமல் இவன் போக மாட்டான் போலையே என்று ஓனர் திணறுமாறும் இந்த மீம் உள்ளது.

இந்த மீம், தீபாவளி போனஸை எதிர்பார்த்து காத்திருக்கும் ஊழியர்களிடம், ஓனர் தீபாவளிக்கு போனஸ் இல்லை. ஸ்வீட் பாக்ஸ் மட்டும் தான் கொடுப்போம் என்று கூறுவது போல அமைந்துள்ளது.

ஊழியர் ஓனரைப் பார்த்து, இந்த வருடமாவது தீபாவளி போனஸ் கிடைக்குமா என்று கேட்கிறார். அதற்கு ஓனர் "இன்னமுமா தீபாவளி போனஸ் தருவோம்ன்னு நம்பிக்கிட்டு இருக்க" என்று கூறுவது போல் நகைச்சுவையாக அமைந்துள்ளது.

தீபாவளி போனஸ் மீம்ஸ்

அடுத்த மீம் இரண்டு ஊழியர்கள் பேசி கொள்வது போல அமைந்துள்ளது. முதல் ஊழியர், "தீபாவளி போனஸ் கிடைக்குமான்னு சந்தேகமா இருக்கு என்று கூறுகிறார். அதற்கு இரண்டாவது ஊழியர் தீபாவளிக்கு முன்னாடி சம்பளம் போடுறாங்களானு பார்ப்போம்" என்று கூறுவது போல அமைந்துள்ளது.

இந்த மீம் இரண்டு நண்பர்கள் பேசிகொள்வது போல அமைந்துள்ளது. நண்பர் அவரின் ஓனரிடம் தீபாவளிக்கு ஸ்வீட் பாக்ஸ், போனஸ் எங்கன்னு கேட்டாராம். அதற்கு அப்பறம் தான் தீபாவளிக்கு லீவே இல்லன்னு தெரிந்தது என்று கூறுவது போல அமைந்துள்ளது.

இதையும் படிங்க:தீபாவளி 2023: இணையத்தில் தெறிக்கும் மீம்ஸ் மற்றும் கடிஜோக்.!

Last Updated : Nov 10, 2023, 5:30 PM IST

ABOUT THE AUTHOR

...view details