சென்னை:டயட் ஃபாலோ பண்ணுவது சற்று கடினம் தான். இதுவே குளிர்காலத்தில் டயர் ஃபாலோ பண்ணுவது என்பது மிகவும் கடினமான ஒன்று தான். மழைக்காலத்தில் குளிர் சற்று அதிகரித்தே காணப்படும். அந்த சமயங்களில் நாம் போர்வைக்குள்ளே இருப்பதையே அதிகம் விரும்புவோம். இது மட்டுமில்லாமல் குளிருக்கு இதமாக சூடாக சாப்பிட வேண்டும் என்று உணவுக்கட்டுப்பாட்டை மறந்து விடுகிறோம்.
குளிர்காலத்தில் ஏற்படும் அதிக பசியால், கையில் கிடைத்த நொறுக்கு தீனீகளையும் விடுவதில்லை. எனவே குளிர்காலத்தில் எப்படி டயட்டை ஃபாலோ பண்ண போகிறோம் என்ற பயம் அனைவரது மனத்திலும் இருக்கும். இனிமேல் அந்த பயம் தேவையில்லை. குளிர்காலத்தில், குளிருக்கு இதமாகவும், அதே வேளையில் டயட்டை ஃபாலோ பண்ணும் வகையிலும் நாங்கள் கூறும் டிப்ஸை ட்ரை பண்ணி பாருங்க.
நட்ஸ் தான் தீர்வு:பருப்பு என நாம் கூறும் நட்ஸ்களில் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள், புரதங்கள், விட்டமின்கள் மற்றூம் தாதுக்கள் நிரம்பியுள்ளன. இவை குளிர்காலத்தில் நமக்கு தேவையான வெப்பத்தையும், ஆற்றலையும் தருகின்றன. ஆகையினால் குளிர்காலத்தில் அல்லது மழைக்காலத்தில் டயட் ஃபாலோ பண்ண வேண்டும் என்று நினைப்பவர்கள் நட்ஸ்களை சாப்பிடலாம்.
இப்போது எந்தெந்த நட்ஸ்களில் என்னென்ன வகையான சத்துக்கள் உள்ளன என்பதையும், டயட்டிற்கு இவை எவ்வாறு உதவுகின்றன என்பதையும் பார்க்கலாம்.
பாதாம் பருப்பு (Almonds): பாதாமில் ஆரோக்கியமான கொழுப்புகள், புரதங்கள், நார்ச்சத்து போன்றவை உள்ளன. பாதாமில் விட்டமின் ஈ போன்றவையும் உள்ளன. இது ஆக்ஸிஜனேற்றத்திற்கும் உதவுகிறது.
அக்ரூட் பருப்பு (Walnuts):அக்ரூட் பருப்பில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் உள்ளன. மேலும் இதில் புரதச்சத்துக்ளும், நார்ச்சத்துக்களும் உள்ளன. மேலும் இவை உடலை சூடாக வைத்திருக்க உதவுகிறது.