ஜெனீவா: உலக சுகாதார அமைப்பின் பொது இயக்குனர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் (Tedros Adhanom Ghebreyesus) திங்கள்கிழமை (ஜூலை 13) காணொலி வாயிலாக செய்தியாளர்களை சந்திக்கையில், டெல்டா வகை கோவிட் வைரஸ்கள் குறித்து மக்களுக்கு எச்சரித்தார்.
தொடர்ந்து அவர் கூறுகையில், “டெல்டா வகை வைரஸ்கள் தீவிரமாக பரவிவருகின்றன. உலகளவில் கரோனா பாதிப்புகள் மீண்டும் அதிகரித்துள்ளன.
10 மாதங்களுக்கு பிறகு மரணங்களும் அதிகரித்து காணப்படுகின்றன. இந்த வைரஸ் 2020ஆம் ஆண்டு இந்தியாவில் முதன் முதலில் கண்டறியப்பட்டது. தற்போது உலகம் முழுக்க பரவியுள்ளது. தற்போதுள்ள நிலையில் தீப்பிடித்து எரிவது போன்ற ஆபத்தில் நாம் உள்ளோம்.