தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sukhibhava

தடுப்பூசிக்கு பயப்படும் கர்ப்பிணியா நீங்கள்? இனி பயப்பட தேவை இல்லை - corona vaccine for pregnant women

கருவுற்ற காலத்தில் கரோனா தடுப்பூசி எடுத்துக்கொள்ள பயப்படுகிறீர்களா? ஆய்வு என்ன சொல்கிறது என தெரிஞ்சிக்கலாம் வாங்க...

Covid vax in third trimester can transfer antibodies to baby
Covid vax in third trimester can transfer antibodies to baby

By

Published : Apr 4, 2021, 4:23 PM IST

கருவுற்ற பெண்கள் கரோனா தடுப்பூசியை பிரசவத்துக்குப் பிறகு போட்டுக்கொள்வதற்காக காத்திருக்கிறீர்களா? புதிதாக நடத்தப்பட்ட ஆய்வின்படி, தங்களது மூன்றாவது மூன்று மாத கால கருவுற்றலில் இருக்கும் தாய்மார், கரோனா தடுப்பூசி எடுத்துக்கொண்டதும் தன்னுடைய ஆண்டிபாடிகளை வயிற்றிலிருக்கும் குழந்தைக்கு அனுப்புகிறார்.

The American Journal of Obstetrics and Gynaecology என்ற ஜர்னலில் வெளியான ஆய்வில் கரோனா தொற்றுக்காக பைசர் அல்லது மாடர்னா தடுப்பூசியை போட்டுக்கொண்ட மூன்றாவது மூன்று மாத கால கருவுற்றலில் இருக்கும் 27 கர்ப்பிணிகளிடம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அந்த ஆய்வில் 28 குழந்தைகளில் தொப்புள் கொடி இரத்தம் பகுப்பாய்வு செய்யப்பட்டது (26 குழந்தைகள் மற்றும் இரட்டையர் உள்பட).

தடுப்பூசி போட்டுக்கொண்ட பெண்களின் உடம்பில் கரோனா தொற்றில் இருந்து பாதுகாக்கும் வலுவான நோயெதிர்ப்பு சக்தி காணப்பட்டதாகக் ஆய்வாளர்கள் தெரிவித்தனர். கரோனா தொற்றுக்கான தடுப்பூசி எடுத்துக்கொண்டதற்கும், பிரசவத்திற்கும் இடைப்பட்ட காலம் கரோனா ஆண்டிபாடிகளை குழந்தைகளுக்கு திறம்பட அளித்ததாகவும் கூறப்படுகிறது.

ஆய்வில் இரட்டையர்கள் உள்பட மூன்று குழந்தைகளுக்கு பிறக்கும்போது நேர்மறையான ஆண்டிபாடிகள் இல்லை என தெரியவந்துள்ளது. இப்பெண்கள் குழந்தை பிறக்கும் மூன்று வாரங்களுக்கு முன்னர்தான் தடுப்பூசி போட்டுக்கொண்டிருந்துள்ளனர். பிரசவத்துக்கு முன்னால் கரோனா தடுப்பூசியின் இரண்டாம் டோஸ் போட்டுக்கொண்ட பெண்கள் தங்கள் குழந்தைகளுக்கு அதிகப்படியான ஆண்டிபாடிகளை கொடுத்திருந்தனர்.

"கர்ப்பமாக இருக்கும்போதே தடுப்பூசி எடுத்துக்கொள்ள நாங்கள் உங்களை அறிவுறுத்துகிறோம். ஒருவேளை தடுப்பூசி குழந்தைகளை பாதிக்கும் என்று நீங்கள் நினைத்தால், அது தவறு. தடுப்பூசி உங்கள் குழந்தைகளை காக்கும் ஆயுதம்" என்கிறார் நார்த்வெஸ்டர்ன் யுனிவெர்சிட்டி பெய்ன்பர்க் ஸ்கூல் ஆப் மெடிசன் என்கிற ஆய்வுப் பள்ளியில் பணியாற்றும் உதவி பேராசிரியர் எமிலி மில்லர்.

இதையும் படிங்க:தொற்று காலத்தில் உணவு முறையில் மாற்றமா? இதை நிச்சயம் தெரிஞ்சிக்கோங்க

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details