தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sukhibhava

செம்பு: நன்மைகள், தீமைகளை தெரிந்துக்கொள்ளுங்கள்! - செம்பு பாத்திரங்களின் நன்மைகள்

செம்பு என்பது நுண் ஊட்டச்சத்து பெற்ற உலோகங்களில் ஒன்றாகும். இது பண்டைய காலத்திலிருந்தே நம் நாட்டில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. உடலில் பல செயல்பாடுகளிலும் இது முக்கியப் பங்கு வகிக்கிறது.

Copper For Our Health
Copper For Our Health

By

Published : Mar 13, 2021, 10:56 AM IST

செம்பு, பித்தளை, மண்சட்டி போன்று சமைக்கும் பாத்திரங்களில் வகை வகையான உலோகங்களை நாம் பயன்படுத்தி வருகிறோம். ஆரம்பத்தில் மனிதர்கள் களிமண்ணால் தயாரிக்கப்பட்ட பாத்திரங்களை பயன்படுத்தினர். கடந்த இரண்டு நூற்றாண்டுகளாக நாம் அலுமினியம், கண்ணாடி, செம்பு, பிளாஸ்டிக் பாத்திரங்களை சமைப்பதற்காக பயன்படுத்தி வருகிறோம். இவற்றில் முக்கியமாக பல சுகாதார நலன்களை பெறுவதற்காக நாம் செம்புப் பாத்திரங்களை பயன்படுத்தத் தொடங்க வேண்டும்.

செம்புப் பாத்திரங்கள்:

செம்புப் பாத்திரங்கள் பண்டைய இந்தியாவில் சொத்தாகவே பார்க்கப்பட்டன. செம்பு, பண்டைய இந்தியாவில் சுரங்கங்களில் இருந்து கண்டெடுக்கப்பட்டு அதன் கண்களில் இருந்து பிரித்து எடுக்கப்பட்டது. ராஜஸ்தானில் உள்ள கேத்திரி செம்பு சுரங்கங்களில் பல காலமாக செம்பு எடுக்கப்பட்டு வந்தது. செம்பு சுலபமாக வெப்பத்தை எடுத்துக் கொள்ளுவதால் சமையலில் அதன் வெப்பத்தை சுலபமாகக் கட்டுப்படுத்தலாம்.

சிறிய அளவிலான செம்பு நம் உடல் நலத்திற்கு பல நன்மைகளை அளிக்கும். ஆனால், குறுகிய காலத்துக்கு சிறிது சிறிதாக செம்பு எடுத்துக் கொள்வது உடலுக்கு ஆபத்தை ஏற்படுத்தலாம். அதிக அளவிலான செம்பு உடலில் தங்கி நச்சுத்தன்மையை ஏற்படுத்தலாம். செம்பு நச்சு உடலில் சேர்வதற்கான அறிகுறிகள்:

  • வயிற்றுப்போக்கு
  • தலைவலி
  • சிறுநீரகக் கோளாறு
  • ரத்த வாந்தி
  • கார்னியா

இந்த நச்சுத்தன்மை காரணமாக செம்பு, பித்தளை பாத்திரங்களுடன் மற்ற உலோகங்கள் பூசப்படுகின்றன. இதனால் செம்பு உணவில் கலக்காமல் இருக்கும். செம்பு, பித்தளை பாத்திரங்களை சமைக்கப் பயன்படுத்துவது நல்லதல்ல. ஏனென்றால், நாம் சமைக்கும் பொருள்களில் உள்ள ஐயோடின் செம்புடன் கலப்பதால் செம்பு உணவில் கலக்கிறது.

பித்தளைப் பாத்திரங்களை சாப்பிடப் பயன்படுத்தலாம், ஆனால் அவற்றை சமைக்கப் பயன்படுத்தக்கூடாது. இவற்றை தூக்குவதும் கடினம். செம்பு குறைப்பாட்டின் காரணமாக வரும் அறிகுறிகள் அரிதாகத்தான் காணப்படும். அவை பின்வருமாறு...

  • சோர்வு, பலவீனம்
  • எலும்புகள் பலவீனம்
  • நினைவாற்றல் குறைவு
  • நடப்பதில் சிரமம்
  • அதிக குளிர் உணர்திறன்
  • வெளிறிய தோல்
  • இளநரை
  • பார்வை இழப்பு

செம்பில் பல நன்மைகளும் உள்ளன. எலும்புகள், ரத்த நாளங்கள், நரம்புகள் மற்றும் நோயெதிர்ப்பு செயல்பாடுகளுக்கு செம்பு உதவுகிறது. பருப்புகள், விதைகள், காளான்கள், ஈரல் உணவுகளில் செம்பு அதிகம் உள்ளது.

இதையும் படிங்க:கரோனாவுக்கு அப்புறமும் நீண்ட ஆயுசு வேணுமா? - இனி இதைச் சாப்பிடுங்க!

ABOUT THE AUTHOR

...view details