தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sukhibhava

சிஓபிடி : மூச்சுத்திணறல் நோயாக இருக்கலாம்! - சிஓபிடி சிகிச்சை

இருமல் என்பது முதுமையின் அறிகுறியாகும் எனப் பல வயதானவர்கள் நினைக்கிறார்கள்; அதற்கு சிகிச்சை அளிக்கத் தேவையில்லை எனவும் நினைக்கிறார்கள். ஆனால் பல நேரங்களில் இருமல் சிஓபிடியால் தூண்டப்பட்டதாக இருக்கலாம். சிஓடிபி என்றால் என்ன? அதற்கு சிகிச்சை அளிக்க முடியுமா? அதைப் பற்றி இந்தக் கட்டுரையில் காணலாம்.

சிஓபிடி :  மூச்சுத்திணறல் நோய்
சிஓபிடி : மூச்சுத்திணறல் நோய்

By

Published : Jul 4, 2021, 12:25 AM IST

நாள்பட்ட நூரையீரல் அடைப்பு நோய் அல்லது சிஓபிடி (க்ரோனிகல் அப்ஸ்ட்ரெக்டிவ் பால்மோனரி டிசிஸ்) என்பது காற்றோற்றம் தடைபடுதல் மற்றும் சுவாசம் தொடர்பான பிரச்னைகள் ஏற்படுத்தும் நோய்களைக் குறிக்கிறது. இதில் எம்பிஸிமா மற்றும் நாள்பட்ட சுவாசக்குழாய் அலர்ஜியும் அடங்கும். பலர் சிஓபிடி பற்றி அறியாமல் இருக்கின்றனர்; இதனை பொதுவான சோர்வு மற்றும் பலவீனம் என்றும் புறந்தள்ளுகின்றனர்.

அறிகுறிகள்:

தொடர் இருமல் அல்லது மூச்சுத்திணறல்.

அதிப்படியான கபம், சளி அல்லது எச்சில் உமிழுதல்.

மூச்சுத்திணறல்,

ஆழ்ந்து மூச்சு விடுவதில் சிக்கல்.

சிஓபிடியைக் கண்டறிவதற்கான முக்கியமான சோதனை ஸ்பைரோமெட்ரி. இச்சோதனையில் ஒரு குழாயின் மூலம் காற்றை ஊதுவதன் மூலம் நுரையீரலின் திறனைக் கண்டறிய முடியும்.

சிலருக்கு எக்ஸ் ரே, ஸ்கேன் மற்றும் ரத்தப்பரிசோதனைகள் தேவைப்படலாம். நோயின் தீவிரத்தை தீர்மானிக்க இந்த சோதனைகள் பயனுள்ளதாக இருக்கும்.

சிஓபிடியின் விளைவுகள்:

சிஓபிடி நோய் தாக்கம் இல்லாத பெரியவர்களுடன் ஒப்பிடும் போது, இந்த நோய் பாதிப்பு உள்ளவர்களே அதிகம் என நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் தெரிவிக்கின்றது.

நீண்ட தூரம் நடக்க முடியாமலும், படிகளில் ஏற முடியாமலும் சிரமப்படுதல்.

வேலை செய்ய முடியாமல் இருத்தல்.

ஆக்சிஜன் டேங்க் போன்ற சிறப்பு உபகரணங்கள் தேவைப்படுதல்.

நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்பது போன்ற சமூக செயல்களில் ஈடுபட முடியாமல் இருப்பது.

குழப்பம் மற்றும் ஞாபக மறதி அதிகரித்தல்.

அவசர கால அறைகளுக்கு அடிக்கடி செல்வது, இரவு நேரங்களில் மருத்துவமனைகளில் தங்க நேரிடுதல்.

கீழ்வாதம், இதயம் செயலிழப்பு, நீரிழிவு, நாள்பட்ட இதய நோய், பக்கவாதம் மற்றும் ஆஸ்துமா போன்ற பிற நாள்பட்ட நோய்கள் இருத்தல்.

மனச்சோர்வு மற்றும் உணர்ச்சிவசப்படுதல் இருந்தால் உடல் நிலை மோசமாக இருப்பதாக அர்த்தம்.

சிஓபிடி சிகிச்சை:

சிஓபிடி அறிகுறிகளுக்கு மருத்துவரால் பரிந்துரைக்கப்பட்ட சிகிச்சைகளுடன், மேலும் கவனத்தில் கொள்ளவேண்டி சில கூடுதல் விருப்ப சிகிச்சைகளை நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் தெரிவிக்கின்றது.

புகைப்பிடிப்பதை நிறுத்துதல்.

புகையிலை புகை மற்றும் பிற காற்று மாசு பாடுகளை தவிர்க்க வேண்டும்.

நுரையீரல் புனர்வாழ்வு பயிற்சி குறித்து மருத்துவரிடம் கேட்டு அறிதல்.

மருந்து எடுத்துக்கொள்ளுதல்

நுரையீரல் தொற்று ஏற்படுவதை தவிர்த்தல்.

ஆக்சிஜன் உபகரணத்தைப் பயன்படுத்துதல்.

நுரையீரல் மறுவாழ்வு பயிற்சி சிஓபிடி நோய் பாதிக்கப்பட்டவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். சுவாச நுட்பங்கள், சோர்வைத் தடுக்கும் மற்றும் உடல் திறனை அதிகரிக்கும் பயிற்சிகள் இதில் அடங்கும். பெரும்பாலான மக்கள் ஒருநாளைக்கு அரை மணி நேரம் நுரையீரல் புனர்வாழ்வு பயிற்சி செய்கிறார்கள் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

1. பர்ஸ் லிப் சுவாசம்:

இந்த பயிற்சி உங்கள் சுவாசிக்கும் எண்ணிக்கையை குறைப்பதுடன், சுவாசப்பாதையை நீண்ட நேரம் திறந்திருக்க செய்கிறது. அதிகமான காற்று உங்கள் நுரையீரலுக்குள் சென்று வருவதால் உங்களால் சுறுசுறுப்பாக இருக்க முடியும். இதனைப் பயிற்சி செய்ய, மூக்கின் மூலமாக காற்றை உள்ளிழுத்து, இரண்டு முறை உதடுகளைக் குவித்து வெளியேற்ற வேண்டும்.

2. வயிற்றின் வழி சுவாசம், டயாபிராக்மடிக் சுவாசம்:

பர்ஸ் லிப் சுவாசம் போலவே மூக்கின் வழியாக சுவாசிக்க வேண்டும். உங்களின் வயிறு எவ்வாறு காற்றால் நிரம்புகிறது என்பதில் கவனம் கொள்ளுங்கள். உங்கள் வயிறு மீது கைகளை வைத்துக்கொள்ளலாம் அல்லது சிறிய அட்டைப்பெட்டி ஒன்றை வைக்கலாம். இதனால் உங்கள் வயிறு மேலேறி இறங்குவதை நீங்கள் உணரமுடியும். உங்களால் முடிந்த வரை இரண்டு அல்லது மூன்று முறை வாய்வழியாக சுவாசிக்க வேண்டும். மார்பு வயிற்றுக்கிடையே உள்ள பகுதியை கொண்டு உங்கள் நுரையீரலை நிரப்பும் காலியாக்கும் வேலையை செய்யும் போது கழுத்து மற்றும் தோள்கள் தளர்வாக இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

தினமும் இந்த பயிற்சிகளை 5 முதல் 10 நிமிடங்கள் செய்யுங்கள். இந்த கோவிட் பெருந்தொற்று காலத்தில், சிஓபிடி நோயாளிகள் மிகவும் ஆபத்தான குழுவில் இருக்கிறார்கள். நீங்கள் சிஓபிடி நோயாளியாக இருக்கும் பட்சத்தில், பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளை பின்பற்றுங்கள், மருந்துகளை சேமித்து வைத்துக் கொள்ளுங்கள், ஆக்சிஜன் சப்ளையை சரிபார்த்துக் கொள்ளுங்கள், சுவாசக் கருவியை கையெட்டும் தூரத்தில் வைத்துக்கொள்ளுங்கள், முடிந்தவரை வீட்டிலேயே இருங்கள். நிலைமை சிக்கலாகும் போது மருத்துவர் அல்லது சுகாதார அமைப்பை விரைவில் நாடுங்கள்.

இதையும் படிங்க:சிறப்பு குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து உணவுகள்!

ABOUT THE AUTHOR

...view details