வாஷிங்டன்: வெள்ளை சர்க்கரை நாம் அன்றாட உணவில் அதிகம் சேர்க்கும் ஒரு பொருளாக இருக்கிறது. டீ, காஃபி, ஸ்வீட்ஸ் என எதை எடுத்துக்கொண்டாலும் அதில் வெள்ளை சர்க்கரையின் பங்கு அதீதமாக உள்ளது. இந்த வெள்ளை சர்க்கரையால் நீரிழிவு நோயைத் தாண்டி வேறு ஏதேனும் விளைவுகள் உள்ளதா என்ற அடிப்படையில் ஆய்வாளர்கள் ஆராய்ச்சி மேற்கொண்டு உள்ளனர்.
இந்த ஆராய்ச்சியில் உணவில் வெள்ளை சர்க்கரை அதிகம் உட்கொள்ளும் நபர்களுக்குச் சிறுநீரகத்தில் கற்கள் உருவாவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளதாக ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். ஒட்டு மொத்த மக்கள் தொகையில் வட அமெரிக்காவில் 7 முதல் 15 விழுக்காடும், ஐரோப்பாவில் 5 முதல் 9 விழுக்காடும் அதேபோல், ஆசியாவில் 1 முதல் 5 விழுக்காடு என மக்கள் சிறுநீரக கற்களால் ஏற்படும் பாதிப்புகளுக்கு ஆளாகி வருகின்றனர்.
ஃபிரான்டியர்ஸ் இன் நியூட்ரிஷன் சார்பில் சர்க்கரை மற்றும் சிறுநீரக கல் இடையே தொடர்புகள் இருக்கிறதா என்ற அடிப்படையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு உள்ளது. அந்த ஆய்வில், பல பதப்படுத்தப்பட்ட உணவுகளில் வெள்ளை சர்க்கரை காணும் நிலையில் ஒருவர் நாள் ஒன்றுக்குப் பல முறை வெள்ளை சர்க்கரையை உட்கொள்வதாகவும், இதனால் சிறுநீரக கல் தொடர்பான பிரச்சனைக்கு ஆளாவதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதையும் படிங்க:வார இறுதியில் தாமதமாக தூங்குவது, வேலை நாட்களில் சீக்கிரம் எழுவது: உடலில் என்ன நடக்கும்.. எச்சரிக்கும் ஆய்வாளர்கள்!