தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sukhibhava

முகத்தில் சுருக்கமா? - அப்போ இதை ஃபலோ பண்ணுங்க! - how to make face scrub

Coffee Face Mask in Tamil: வீட்டில் உள்ள பொருள்களை வைத்து செலவே இல்லாமல் முகத்தின் இளைமையை தக்க வைக்கும் ஃபேஸ் பேக்கை எப்படி செய்யலாம் என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம்.

Coffee Face Mask For Health Skin Tamil
இப்பவே முகத்தில் சுருக்கம் வருதா?...அப்போ இதை ஃபலோ பண்ணுங்க!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 31, 2023, 1:48 PM IST

சென்னை: நம் அன்றாட வாழ்க்கையில் சிலர் காலையைத் தொடங்குவதே காபியிலிருந்து தான். அப்படி உடலுக்கு உடனடியாக புத்துணர்ச்சி கொடுக்கும் காபி நம் சருமத்தை மிருதுவாக்கி பளிச்சிட வைக்கும் எனச் சொன்னால் நம்ப முடிகிறதா? ஆமாங்க முகத்தில் ஏற்படும் முகப்பரு, கருமை, சுருக்கம் என அனைத்திலும் இருந்து சுலபமாக விடுபடக் காபி பவுடர் ஒன்றே போதுமானது.

இந்த ஃபேஸ் பேக்கை செய்வதற்கு தேவையானவை:

  • பால் - ஒரு ஸ்பூன்
  • தேன் - ஒரு ஸ்பூன்
  • ஆல்லிவ் ஆயில் - ஒரு ஸ்பூன்
  • நாட்டு சக்கரை - ஒன்றரை ஸ்பூன்
  • காபி பவுடர் - இரண்டு ஸ்பூன்

செய்யும் முறை: சொல்லப்பட்ட பொருட்களை எல்லாம் ஒரு குட்டி பாத்திரத்தில் கலந்து கொள்ளவும். பின் இந்த பேஸ்டை முகத்தில் நன்றாக தடவி 20 நிமிடங்களுக்கு நன்றாக உளர்ந்த பின்னர், சில்லென்ற நீரால் முகத்தை கழுவி கொள்ளவும். பின், 20 நிமிடங்களிலே முகம் பளபள என பொலிவாக இருப்பதை நாம் பார்க்கலாம்.

முகத்தின் சருமத்தை மிருதுவாகவும் அழகாகவும் மாற்றும் தன்மை கொண்டது இந்த காபி பவுடர். இதனை முகத்திற்கு மட்டுமல்லாமல் அவ்வபோது உடம்பிலும் தேய்த்து குளிப்பதால் உடலும் சீராகும்.

காபி பவுடரின் நன்மைகள்: இந்த ஸ்கரப்பில் இருக்கும் நாட்டு சக்கரை முகத்தை இளைமையாகவும், அதில் இருக்கும் கிளைகோலிக் அமிலம் முகத்தை பளபளவென வைக்க செய்கிறது. இதற்கு பாக்டீரியா எதிர்ப்பு சக்தி இருப்பதால் முகத்தில் இருக்கும் இறந்த செல்களை நீக்கி முகத்தை பொலிவாக தக்க வைக்கிறது.

காபியில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் சருமத்தை மாசுபடுத்தாமல் தடுக்கிறது. இதன் விளைவாக முகத்திற்கு இளமைப் பொலிவு தருகிறது. மேலும், இந்த காபி மாஸ்க் கருவளையம் மற்றும் முகப்பருவை குறைக்கும் திறன் கொண்டது.

தேனில் உள்ள நுண்ணுயிர் எதிர்ப்பு பண்புகள் (anti-microbial properties ) முகப்பருவை குறைக்க உதவுகிறது. மேலும், முகத்தில் உள்ள இறந்த செல்கள், சுருக்கங்களை அகற்றி இளமையை தக்க வைக்க உதவுகிறது.

பாலில் உள்ள வைட்டமின் ஏ வறண்ட சருமத்தை போக்கும் ஆற்றல் கொண்டது. மேலும் இதில் உள்ள 'டி' வைட்டமின் முகத்தில் உள்ள சுருக்கங்களை குறைத்து, சருமத்தை ஹெல்த்தியாக வைத்துக்கொள்ள உதவுகிறது.

ஆலிவ் ஆயில் சருமத்திற்கு இயற்கையான மாய்ஸ்சரைசராக செயல்படுகிறது. இதில் உள்ள வைட்டமின் ஏ, டி, ஈ, கே ஆகியவை சரும ஆரோக்கியத்திற்கு முக்கியமான ஒன்றாக இருக்கிறது. இந்த ஆயில் பாக்டீரியா எதிர்க்கும் பண்புகளை கொண்டதால் சுற்றுச்சூழலில் இருக்கும் பாக்டீரியாவின் தாக்கங்களிலிருந்து உடலைப் பாதுகாக்கிறது.

இதையும் படிங்க:Pedicure: செலவே இல்லாமல் வீட்டிலேயே பெடிக்யூர் செய்யலாம்... எப்படினு தெரியுமா?

ABOUT THE AUTHOR

...view details