ஒற்றைத் தலைவலி என்பது ஒரு நபரின் இயலாமைக்கு மிகப்பெரிய காரணமாக இருக்கிறது. இதற்கு சிகிச்சை அளிப்பது நோயாளிக்களுக்கு நிரந்தரத் தீர்வை கொடுக்காது. ஒற்றைத் தலைவலியிலிருந்து ஒரு நபருக்கு நிரந்தரத் தீர்வை கொடுக்காவிட்டாலும், தலைவலியை நமது உணவு மூலம் குறைக்க முயற்சிக்கலாம் என்கிறது பிரிட்டிஷ் மெடிக்கல் ஜர்னல் என்னும் வார நாளிதழ்.
"நம்முடைய அண்மைக் கால உணவுகளுடன் ஒப்பிடும்போது நமது மூதாதையர்கள் வேறு வேறு அளவுகளில், வேறுவேறு வகைகளிலான கொழுப்புகளை உண்டனர். பதப்படுத்தப்பட்ட உணவுகளில் சோளம், சோயா பீன், பருத்தி விதை போன்றவற்றை சேர்ப்பதால் நமது உடலில் ஒமேகா-6, ஒமேகா-3 போன்ற பாலிஅன்சாச்சுரேட்டன் ஃபேட்டி ஆசிட்கள் (Polyunsaturated fatty acids) உடலில் சேர்கின்றன. இவை உடலில் வலியை தோற்றுவிக்கின்றன" என்கிறார் யுஎன்சி மருத்துவப் பள்ளியின் உளவியல் துறை உதவி பேராசிரியர் டைஸ்ஸி ஜமோரா.
இந்நாளிதழ் முன்னதாக ஆசிட்களின் அளவு ஒரு நபர் மீது என்ன மாறுதல்களை ஏற்படுத்துகிறது என்பதையும், இதனால் ஏற்படும் வலியின் பாதிப்பு குறித்து அறிய ஒற்றைத் தலைவலியால் பாதிக்கப்பட்டுள்ள 182 நோயாளிகள் ஆய்வுக்கு உட்படுத்தியது.