தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sukhibhava

ஏலக்காய் போதும்: எளிதாக உடல் எடையைக் குறைக்க முடியும்!

Cardamom for weight loss in Tamil: மசாலாப் பொருளான ஏலக்காய் உடல் எடையை குறைப்பதற்கு உதவுகிறது. தினமும், ஏலக்காய் சாப்பிட்டால், நமது உடலில் என்னென்ன மாற்றங்கள் நிகழ்கின்றன என்று பார்க்கலாம்.

உடல் எடையைக் குறைக்க ஏலக்காய்
உடல் எடையைக் குறைக்க ஏலக்காய்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 22, 2023, 4:17 PM IST

சென்னை:இந்தக் காலகட்டத்தில் உடல் பருமன் என்பது பெரும் பிரச்னையாக உள்ளது. உடல் எடையைக் குறைப்பதற்குப் பலர் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகின்றனர். டயட் என்ற பெயரில் சரியாக உணவு உண்ணாமல் உடலையும் வருத்தி வருகின்றனர். இது மட்டுமில்லாமல் கடுமையான உடற்பயிற்சிகளையும் செய்து தோல்வி அடைகின்றனர். ஆனால், இவ்வளவு கஷ்டமின்றி, நம் சமையலறையில் உள்ள மசாலாப்பொருளான ஏலக்காயைப் பயன்படுத்தி உடல் எடையைக் குறைக்கலாம் என்று உங்களுக்குத் தெரியுமா?

உடல் எடையைக் குறைப்பதற்கு ஏலக்காய்: ஏலக்காய் உணவிற்குச் சுவையைத் தரும் பொருள் மட்டுமில்லை. ஏலக்காயில் ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளன. குறிப்பாக உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்பைக் குறைப்பதற்குப் பெரிதும் உதவுகிறது. இதனால், எளிதில் தொப்பையைக் குறைக்கலாம். ஏலக்காயில் குறைவான கலோரிகளும், அதிகப்படியான ஊட்டச்சத்துக்களும் உள்ளன. மேலும் ஏலக்காயில் ஃபிளாவனாய்டுகள், பாலிபினால்கள் போன்ற ஆக்ஸிஜனேற்றங்களும் உள்ளன. இவை, உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்பை எரிக்கவும், உடல் எடையைக் குறைக்கவும் உதவுகின்றன. தினமும் ஏலக்காய் சாப்பிட்டால் நமது உடலில் என்னென்ன மாற்றங்கள் நிகழ்கின்றன என்று பார்க்கலாமா?

மெட்டபாலிசத்தை மேம்படுத்துகிறது:ஏலக்காய் உடலில் வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்துகிறது. இதனால் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பு கரைகிறது. இதன் மூலம் எளிதாக உடல் எடையைக் குறைக்கலாம். செரிமானத்தை ஊக்குவிக்கின்றது. மேலும் உடல் எடையைக் குறைப்பதற்குத் தடையாக இருக்கும் வாயு பிரச்சினை, மலச்சிக்கல் போன்றவை ஏற்படாதவாறு பாதுகாக்கிறது.

பசியைக் கட்டுப்படுத்தும்: ஏலக்காயிற்குப் பசியை அடக்கும் பண்புகள் அதிகமுள்ளன. இது அதிகப்படியாக உணவு உட்கொள்வதைக் கட்டுப்படுத்த உதவுகிறது. அதிகப்படியான நொறுக்குத்தீனிகள், துரித உணவுகள் போன்றவற்றை உட்கொள்வதால் உடல் எடையை அதிகரிக்கும். இந்த நிலையில் ஏலக்காயைச் சாப்பிடும் போது, பசி தூண்டப்படுவதைக் குறைத்து, குறைவாக உண்ண வழி வகுக்கிறது.

நீரை வெளியேற்றும்:ஏலக்காய், உடலில் உள்ள அதிகப்படியான நீரை வெளியேற்றும். அதாவது, ஏலக்காயைத் தொடர்ந்து சாப்பிட்டு வரும் பட்சத்தில், அடிக்கடி சிறுநீர் வெளியேறும். இதில், உடலில் உள்ள அதிகப்படியான நீர் வெளியேறி, உடல் எடை விரைவாகக் குறையும்.

நச்சுக்களை வெளியேற்றும்:ஏலக்காய் கல்லீரல் செயல்பாட்டை மேம்படுத்துவதற்கு உதவுகிறது. உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றுகின்றன. உடல் எடையைக் குறைப்பதற்கு ஏலக்காய் பெரிதும் உதவுகிறது. இருப்பினும் ஆரோக்கியமான உணவு முறை, சீரான உடற்பயிற்சி போன்றவை அவசியம்.

இதையும் படிங்க:நீரிழிவு நோயாளிகள் முட்டை சாப்பிடலாமா? கூடாதா?.. அமெரிக்க அளித்த அதிர்ச்சி தகவல்!

ABOUT THE AUTHOR

...view details