அமெரிக்காவில் கரோனா தொற்று தொடர்பான ஆய்வு ஒன்று மேற்கொள்ளப்பட்டது. அந்த ஆய்வில் 2019, 2020ஆகிய ஆண்டுகளில் குளிர் காய்ச்சலுக்காக தடுப்பூசி செலுத்திக்கொண்ட குழந்தைகளுக்கு கரோனா தொற்று பாதிப்பு குறைவாக ஏற்பட்டது கண்டறியப்பட்டது.
இதை கருத்தில் கொண்டு இந்தியாவில் உள்ள குழந்தைகள் நல மருத்துவர்கள், குழந்தைகளுக்கு குளிர் காய்ச்சல் அல்லது காய்ச்சல் தடுப்பூசி செலுத்த பரிந்துரைக்கின்றனர். இதுகுறித்து மேலும் தெரிந்துகொள்ள நமது ஈடிவி பாரத் குழந்தைகள் நல மருத்துவரான சோனாலி நவலேவை சந்தித்து பேசினோம்.
மருத்துவர் சோனாலி நவலே கூறுகையில், "கரோனா தொற்று மூன்றாம் அலையில் இருந்து குழந்தைகளை பாதுகாக்க நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வேண்டியது அவசியம் என்றார். இது மழைக்காலம் என்பதால் சளி, இருமல், காய்ச்சல், சுவாச பிரச்னை போன்றவை ஏற்படலாம். குளிர் காய்ச்சல் தடுப்பூசி போடுவதன் மூலம் இவற்றில் இருந்து குழந்தைகளை ஓரளவு பாதுகாக்கலாம்.