தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sukhibhava

மார்பகப் புற்றுநோய் சிகிச்சைகளும் படிநிலைகளும்! - Hormone therapy treatment

மார்பகப் புற்றுநோய் சிகிச்சைகளையும், படிநிலைகளையும் குறித்து தெரிந்து கொள்ள மருத்துவர் ரகுராமிடம் கேட்டோம்.

Breast Cancer
Breast Cancer

By

Published : Oct 31, 2020, 5:53 PM IST

இந்தியாவைப் பொறுத்த வரை பெண்களைக் குறித்த அடையாளங்களில் மார்பகங்களுக்கு மிக முக்கியமான இடத்தை வழங்கியுள்ளனர். கோயில்களிலும், வரலாற்றுக் குறிப்புகளிலும் இது சார்ந்த தரவுகள் காணக்கிடைக்கின்றன. அதிகமாக மறைத்து வைக்கப்பட்டதாலோ என்னவோ? அது பெண்களின் அந்தரங்க உறுப்பாக மட்டுமே இன்றளவும் பாவிக்கப்படுகிறது. இதனால் மார்பகத்தில் ஏற்படும் நோய்களைக் கூட பெண்கள் கவனித்துப் பார்ப்பதில்லை. இது குறித்து உலகளவில் விழிப்புணர்வு ஏற்படுத்த நடப்பு மாதமான அக்டோபர் மாதம், உலகம் முழுவதும் மார்பகப் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு மாதமாகக் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

மார்பகப் புற்றுநோய் குறித்து அறிய மிக முக்கியமாகச் செய்ய வேண்டியதில் சுய பரிசோதனையும் ஒன்று. மாதவிடாய் ஏற்பட்ட 7 முதல் 10 நாள்களுக்குள் இரு மார்பகங்களுக்கு இடையே வித்தியாசம் தெரிகிறதா என்று கண்களால் பார்ப்பதோடு, அந்தப்பக்க கையின் நான்கு விரல்களால் அழுத்தித் தேய்த்தும் சுயபரிசோதனை செய்ய வேண்டும்.

இப்படிச் செய்யும்போது, மார்பில் கட்டி அல்லது வீக்கம், மார்பகத் தோலில் அதீத சுருக்கம், மார்பகத்தில் ரத்தக்கசிவு போன்ற வித்தியாசமான அறிகுறிகள் தென்பட்டால், உடனடியாக மருத்துவரைச் சந்தித்து ஆலோசனை பெற வேண்டும். மார்பகப் புற்றுநோய் சிகிச்சைகளையும், அதன் படிநிலைகளையும் குறித்து தெரிந்து கொள்ள மருத்துவர் ரகுராமிடம் கேட்டோம்.

சமீபத்தில், 62 வயது மதிக்கத்தக்க ஒரு பெண்ணுக்கு வலதுபுற மார்பகத்தில் மூன்று மாதங்களில் ஒரு கட்டி உருவாகியுள்ளது. மார்பகத்தில் வலி இல்லாத இந்தச் சிறு கட்டியின் ஆரம்பக் காலக்கட்டத்திலேயே பரிசோதனை செய்து முதல்நிலை, இரண்டாம் நிலை ஆகியவற்றைக் கண்டறிந்துள்ளார். இந்த நிலையில் கண்டறியப்படுபவர்கள் உயிருக்கு ஆபத்து என்னும் நிலையிலிருந்து தப்பிவிடுகிறார்கள்.

ஒருவேளை புற்றுநோய் இருப்பின் அதன் நிலைகள் (Staging) மற்றும் அதன் தீவிரம் (Grading) கணக்கிடப்படுகின்றன. அவற்றைக் கணக்கில் கொண்டு அதற்கேற்றாற்போல அறுவை சிகிச்சை, கதிரியக்கச் சிகிச்சை, கீமோதெரபி ஆகிய மும்முனை சிகிச்சைகளில் ஏதேனும் ஒன்றோ அல்லது அனைத்துமே வழங்கப்படுகிறது.

மார்பகப் புற்றுநோய் என்றால் என்ன?

நாளங்களும் பால் சுரப்பியும் இணைந்து உருவாவது மார்பகத் திசுவில் அசாதாரண முறையில் ஏதேனும் ஒரு செல் இரண்டாக பிரிந்து வளரத் தொடங்கும்போது மார்பகப் புற்றுநோய் உருவாகிறது. மார்பகத்தில் கார்சினோமா என்ற புற்றுநோயும் உருவாகிறது. மார்பகப் புற்றுநோயில் பொதுவான புற்றுநோய்யான இது மார்பக நாளங்களிலிருந்து உருவாகிறது. இதைப் போல பால் சுரப்பியில் இருந்தும் புற்றுநோய் உருவாகிறது.

புற்றுநோயின் நிலைகள் என்னென்ன?

மார்பகப் புற்றுநோயைக் கண்டறிதல் அதைத் தானாகவே பரவ வழிவகுக்காது. அதற்கு பரவக் கூடிய ஆற்றலைக் கொண்டுள்ளது. இந்தப் பரவும் நிலைகளை ஸ்டேஜ் எனச் சொல்வோம். வளரும் தீவிர நிலையை கிரேட் எனச் சொல்வோம். மூன்று வகையான கிரேட் உள்ளது. புற்றுநோய் மெல்ல வளரும் நிலை லோயர் கிரேட் (Grade 1), ஹையர் கிரேட் (Grade 3) வேகமாக வளரும் நிலையைக் குறிக்கிறது.

இதையும் படிங்க:ஆண்களுக்கு மார்பகப் புற்றுநோய் வருமா? கட்டுக்கதைகளும் உண்மைகளும் : பாகம்-1

ஸ்டேஜ் 1

மார்பில் இருக்கும் கட்டி 2செமீ அளவில் காணப்படும்;பரவாது.

ஸ்டேஜ் 2

நிணநீர் முனையுடன் அல்லது முனையின் தொடர்பில்லாமல் மார்பகத்தில் கட்டி ஏற்படும். இதன் அளவு- 2 முதல் 5 செமீ வரை இருக்கும். உடலில் பிற பாகங்களுக்கு பரவாது.

ஸ்டேஜ் 3

5 செமீக்கு அதிகமான அளவில் அல்லது அதற்கு மேலாக கட்டி உருவாகும். மார்பகத்தின் மேற்புறத்தோல் அல்லது அதன் அடித்தோலில் ஏற்படும்.

ஸ்டேஜ் 4

எந்த அளவிலும் கட்டி உருவாகலாம். நிணநீர் முனையுடனும் உருவாகலாம், அது இல்லாமலும் உருவாகலாம். இந்த நிலையில் புற்றுநோய் பிற உறுப்புகளுக்கும் பரவும்.

மார்பகப் புற்றுநோய்க்கு சிகிச்சை அளிப்பதன் முக்கிய நோக்கங்கள்

  • மார்பகத்தில் புற்றுநோய் பாதித்த பகுதியுடன், அக்குளில் பாதிப்படைந்த நிணநீர் முடிச்சுகளையும் அகற்ற வேண்டும்.
  • ரத்த ஓட்டம் மூலமும், நிணநீர் அமைப்பு மூலமும் பரவிய புற்றுநோய் செல்களை முழுவதும் அழிக்க வேண்டும்.

புற்றுநோய் சிகிச்சைகள்?

  • அறுவை சிகிச்சை
  • கீமோதெரபி
  • ரேடியோதெரபி
  • ஹார்மோன்தெரபி

கவனம்: அனைத்து நோயாளிகளும் கீமோதெரபி, ரேடியோதெரபி, ஹார்மோன்தெரபி எடுத்துக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை.

மார்பகப் புற்றுநோய் எங்கெல்லாம் பரவும்?

கட்டியின் அளவு, கிரேட், நிணநீர் முனையின் பங்கு, ஸ்டேஜ் ஆகியவை புற்றுநோய் எங்கு பரவுகிறது என்பதை கண்டறிய உதவுகிறது. புற்றுநோய் நான்கு இடங்களில் பரவக்கூடும்.

  • கல்லீரல், நுரையீரல், மூளை, எலும்புகள்

ஸ்டேஜிங் டெஸ்ட்ஸ் மேற்கண்ட இடங்களில் புற்றுநோய் பரவியுள்ளதாக எனக் கண்டறிய உதவுகிறது.

மார்பகப் புற்றுநோய்

மார்பகப் புற்றுநோயில் கவுன்சிலிங் ஏன் முக்கியம்?

புற்றுநோய் ஆபத்தான நோய்களில் ஒன்று என்பதால் அதற்கு ஆலோசனை வழங்குவது மிக முக்கியமானதாகும். போதுமான அளவில் உளவியல் ஆலோசனைகள் நோயாளிகளுக்கு அவசியம். ஒவ்வொரு நிலையிலும் எடுத்துக் கொள்ளும் சிகிச்சைக்கு அவர்கள் தங்களைத் தயார்ப்படுத்திக் கொள்ள வேண்டும். நோய் பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்களுக்கும் இதைத் தெரிவிக்க வேண்டும்.

இந்த கவுன்சிலிங்கில் பரிசோதனைக் குறித்த விளக்கங்களையும், புற்றுநோய்க்கான ல்வேறு வகையான சிகிச்சைகளையும் நிபுணத்துவம் வாய்ந்த மருத்துவர் வழங்குவார்.

இதையும் படிங்க:மார்பகப் புற்றுநோயைக் கண்டறிய மரபணு பரிசோதனை முக்கியமா? கட்டுக்கதைகளும் உண்மைகளும் : பாகம்-2

ABOUT THE AUTHOR

...view details