சிலருக்கு வெங்காய வாசனையே ஆகாது, சிலர் வெங்காயமில்லா பண்டம் குப்பையிலே என்ற ரகத்தினராக இருப்பர். இருவருமே கட்டாயம் அதனுடைய பயன்கள் குறித்து தெரிந்துகொள்ள வேண்டும். அவர்களுக்கான கட்டுரை தான் இது. வெங்காயத்தை சாலட் (அ) டாப்பிங்ஸ், குழம்பு, கூட்டு, சூப் என எப்படி பயன்படுத்தினாலும் உணவின் சுவை அதிகரிக்கும். குறிப்பாக வெங்காயத்தை குளிர்காலத்தில் சாப்பிடும்போது அதன் பலன் அபரிவிதமாக இருக்கும்.
- ஊட்டச்சத்து நிறைந்துள்ள வெங்காயம்
குறைந்த கலோரிகள் அதே சமயம் வைட்டமின் சி, வைட்டமின் பி6, தாதுக்கள், மெக்னீசியம், நார்ச்சத்து, பாஸ்பரஸ், புரதம், ஃபோலேட் உள்ளிட்ட சத்துக்களைக் கொண்டுள்ளது. ஆன்டி ஆக்சிடென்ட் ஆகவும் செயல்படுகிறது. இதய நோய்களைக் குறைக்கும் குவெர்செட்டின் நிறமியும் வெங்காயத்தில் உள்ளது.
இந்த நிறமி குளிர்காலத்தில் ஏற்படும் தோல் ஒவ்வாமை, புற்றுநோயில் இருந்து நம்மை காக்கிறது. நிரீழிவு நோய் உள்ளவர்களுக்கும் இது நன்மை பயக்கும். வெங்காயம் மட்டுமல்ல, வெங்காயத்தின் விதைகளும் உடல் ஆரோக்கியத்திற்கு ஏற்றது. இந்திய ஆயுர்வேத மருத்துவத்தில் கூட இது பயன்படுத்தப்படுகிறது.
2. நல்ல தூக்கத்திற்கு உதவும்
வெங்காயத்தில் இருக்கும் ஊட்டச்சத்துக்கள் செரோட்டின் மற்றும் டோபமைன் ஆகிய ஹார்மோன்களின் நிலையை சீராக வைத்திருக்கிறது. இதுதான் நல்ல தூக்கத்திற்கு இன்றியமையாதது.
3. தொற்றுக்களுக்கு எதிரான பாதுகாப்பு
வெங்காயத்தில் அலர்ஜி, நோய்த்தொற்றுகளுக்கு எதிரான காரணிகள் உள்ளன. குளிர்காலத்தில் வெங்காயத்தை எடுத்துக்கொள்வதால் இருமல், காது வலி, காய்ச்சல் மற்றும் பல நோய்களிலிருந்து தற்காத்துக் கொள்ளலாம்.