தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sukhibhava

பளபளக்கும் சர்மம் வேண்டுமா - அப்போ கடிங்க கேரட்... குடிங்க கேரட் ஜூஸ்

கேரட் எடுத்துக்கொண்டால் உடலில் ஏற்படும் நன்மைகள் குறித்து காணலாம்.

benefits of carrot juice  carrot juice  juice  carrot  கேரட் ஜூஸ்  கேரட்  ஜூஸ்  கேரட் ஜூஸின் நன்மைகள்
கேரட் ஜூஸ்

By

Published : Nov 15, 2021, 11:53 AM IST

நாள்தோறும் ஒரு கேரட் தவறாமல் எடுத்துக்கொள்ள வேண்டும். கேரட்டை உணவில் அதிகம் சேர்த்துவந்தால், நிறைய நன்மைகள் கிடைக்கும். ரத்தத்தைச் சுத்தப்படுத்தும் தன்மை வாய்ந்தது கேரட். ஆகையால் வாரத்திற்கு இருமுறை கேரட் ஜூஸ் குடிக்க வேண்டும். இல்லை என்றால் தினமும் ஒரு கேரட் எடுத்துக்கொள்ள வேண்டும்.

ஆண்கள் கேரட் சாப்பிட்டால் அவர்களின் விந்தணுக்களின் அளவு அதிகரிக்கும். எனவே குழந்தை பெற்றுக்கொள்ள நினைப்போர், நாள்தோறும் கேரட்டை எடுத்துக்கொள்ள வேண்டும்.

மேலும் கேரட் சாப்பிட்டால் வயிற்றில் ஏற்படும் பிரச்சினைகள் குணமாகும். மேலும் கொழுப்பு, வாயு நீங்கும். ஒரு டம்ளர் கேரட் சாருடன், சிறிது ஏலக்காய்ப்பொடி, பனங்கற்கண்டு சேர்த்து குடித்தால் உடல் சோர்வு நீங்கும்.

பளபளக்கும் சர்மம்

உடலுக்கு குளிர்ச்சியைத் தருவதோடு, வாய்ப் பகுதிகளில் புற்றுநோய் வராமல் தடுக்கும். கேரட்டை துருவி, அதில் உப்பு, தயிர், தனியா பொடி கலந்து சாப்பிட்டால் வயிற்றுப்புண் சரியாகும்.

மேலும் கேரட்டுடன், தேங்காய், கற்கண்டு கலந்து குடித்தால் வைட்டமின் ஏ அதிகரிக்கும். இது கண்பார்வைக்கும் மிகவும் நல்லது. மேலும் கருவளையம், கரும்புள்ளிகள், முகப்பரு முற்றிலும் நீங்கிவிடும்.

வைட்டமின் - ஏ

உலர்ந்த சருமம் இருப்பவர்கள், கேரட் சாறுடன் தேன் அல்லது ஆலிவ் ஆயில் சேர்த்து, முகத்தில் தடவி, 20 நிமிடம் கழித்து முகத்தைக் கழுவினால், சருமத்துக்குத் தேவையான சத்து கிடைக்கும். கோடைகாலத்தில் புற ஊதா கதிர்கள் தோலை பாதிப்பதால், தோல் கருக்கும். அதனைத் தடுக்க கேரட் சாப்பிடுவது நல்லது.

இதையும் படிங்க: உடல் சூட்டைத் தணிக்க இதை குடியுங்கள்!

ABOUT THE AUTHOR

...view details