நமது உடல் அமைப்பின் வளர்ச்சி, செயல்பாடு ஆகியவற்றுக்கு வைட்டமின் மிகவும் அவசியம். உடலுக்கு சிறிய அளவில் பல்வேறு வைட்டமின்கள் தேவைப்படுகின்றன.
வைட்டமின்கள் எவை
- பி 1 - தானியங்கள் மற்றும் அரிசி, பன்றி இறைச்சி, கருப்பு பீன்ஸ்
- பி 2 - மாட்டிறைச்சி கல்லீரல், காலை உணவு தானியங்கள், ஓட்ஸ், தயிர், காளான்கள், பாதாம்
- பி 3 - மாட்டிறைச்சி கல்லீரல், கோழி மார்பகம், பழுப்பு அரிசி, வலுவூட்டப்பட்ட தானியங்கள், வேர்க்கடலை.
- பி 5 - காலை உணவு தானியங்கள், மாட்டிறைச்சி கல்லீரல், காளான்கள், சூரியகாந்தி விதைகள்
- பி 6 - கொண்டைக்கடலை, மாட்டிறைச்சி கல்லீரல், டுனா, கோழி மார்பகம், வலுவூட்டப்பட்ட தானியங்கள், உருளைக்கிழங்கு
- பி 7 - மாட்டிறைச்சி கல்லீரல், முட்டை, சால்மன், சூரியகாந்தி விதைகள், இனிப்பு உருளைக்கிழங்கு
- பி 9 - மாட்டிறைச்சி கல்லீரல், கீரை, கருப்பட்டி பட்டாணி, வலுவூட்டப்பட்ட தானியங்கள், அஸ்பாரகஸ்
- பி 12 - மட்டிகள், மாட்டிறைச்சி கல்லீரல், வலுவூட்டப்பட்ட ஈஸ்ட், தாவர பால், காலை உணவு தானியங்கள், எண்ணெய் மீன்.
- வைட்டமின் சி - சிட்ரஸ் பழங்கள், பெர்ரி, சிவப்பு மற்றும் பச்சை மிளகுத்தூள், கிவி பழங்கள், ப்ரோக்கோலி, வேகவைத்த உருளைக்கிழங்கு, வலுவூட்டப்பட்ட சாறுகள் உள்ளன.
- வைட்டமின் ஏ - இனிப்பு உருளைக்கிழங்கு, மாட்டிறைச்சி கல்லீரல், கீரை மற்றும் பிற அடர் இலை கீரைகள், கேரட்
- வைட்டமின் டி - காட் ஈரல் எண்ணெய், எண்ணெய் மீன், பால் பொருட்கள், வலுவூட்டப்பட்ட சாறுகள்
- வைட்டமின் ஈ - கோதுமை, கொட்டைகள், விதைகள், சூரியகாந்தி மற்றும் குங்குமப்பூ எண்ணெய்கள், கீரை
- வைட்டமின் கே - இலை பச்சை காய்கறிகள், சோயாபீன்ஸ், ஓக்ரா, கிவி
தாது சத்து
தாதுக்கள் இல்லாமல், நம் உடலில் தோல், தசைகள், திசுக்கள், சிவப்பு ரத்த அணுக்கள் உருவாகவோ அல்லது நமது உடலின் பல்வேறு பாகங்கள் ஆக்ஸிஜனைப் பெறவோ முடியாது.
நமது மூளைக்கும் உடலின் மற்ற உறுப்புகளுக்கும் இடையில் செய்திகளை பரிமாறிக் கொள்வதும் தாதுக்களால் சாத்தியமாகும். அதனால்தான் இது நம் உணவில் இன்றியமையாததாக உள்ளது.
கால்சியம், மெக்னீசியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், சோடியம் என மொத்தம் ஐந்து மிக முக்கியமான தாதுக்கள் உள்ளன. இது தவிர குரோமியம், தாமிரம், அயோடின், இரும்பு, மாங்கனீசு, துத்தநாகம் ஆகியவையும் உடலுக்கு தேவைப்படும் முக்கியத் தாதுக்களாக உள்ளன.
- கால்சியம்
நம் எலும்பு மற்றும் பற்களின் வளர்ச்சிக்கு அத்தியாவசியமானது. நம் தசைகள், இதயம், நரம்புகள் மற்றும் இரும்புச்சத்தின் செயல்பாட்டுக்கு அவசியம்.
செல்களில் ஊட்டச்சத்துகளின் பரிமாற்றத்திற்கு, தசை வலிக்கு நிவாரணத்துக்கும் பயன்படும். தூக்கமின்மையை குணமாக்கும். ரத்த அழுத்தத்தை சீராக்கும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
உணவு ஆதாரங்கள் : பால், பாலாடைகட்டி, வெண்ணெய், தயிர், ராகி, சோயா, சூரியகாந்தி விதைகள், பயிறுகள், ஆரஞ்சுப்பழம், மத்திமீன் ஆகியவற்றில் கால்சியம் அதிகம்.
- பாஸ்பரஸ்
ஆரோக்கியமான எலும்புகள் மற்றும் பற்களுக்கு அவசியம். நம் உடலில் அனைத்து செல்களிலும் இது காணப்படுகிறது. நம் உடலில் அமிலம் மற்றும் காரத்தன்மையின் சமநிலையை பராமரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
உணவு ஆதாரங்கள்: இறைச்சி, பால், முட்டை, தானியங்கள் ஆகியவற்றில் பாஸ்பரஸ் அதிகம் உள்ளது.
- மக்னீசியம்
நம் உடலில் அமினோஅமிலங்களில் இருந்து புரதம் உருவாக்க மக்னீசியம் தேவை. தசைகள் மற்றும் நரம்புகளின் செயல்பாட்டிற்கு அவசியம். ரத்தக்கொழுப்பு மற்றும் ரத்த சர்க்கரைஅளவைச் சீராக்கும். உடலின் வெப்பநிலையை சமன்படுத்தும். பிற தாது உப்புகள் நம் உடலில் செயல்பட மக்னீசியம் மிக முக்கியம்.
உணவு ஆதாரங்கள்: பருப்புகள், கீரைகள், வாழைப்பழம், தானியங்கள், இறைச்சி, மீன், சாக்லேட் ஆகியவற்றில் மக்னீசியம் அதிகம் உள்ளது.
- சோடியம்
நம் உடலில் அமிலம் மற்றும் காரத்தன்மையை சம அளவில் வைக்க உதவும். நீர்ச் சமநிலை காக்கும். நரம்புகளின் தூண்டுதல்கள் பரிமாறுவதற்கும், தசைகளின் செயல்பாட்டிற்கும் சோடியம் அவசியம்.
உணவு ஆதாரங்கள்: உப்பு, பதப்படுத்தப்பட்ட உணவுகள், ஊறுகாய், காய்கறிகள், பழங்கள் ஆகியவற்றில் சோடியம் உள்ளது.
- பொட்டாசியம்