தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sukhibhava

கோடைகால வெயிலை சமாளிக்க 5 பழக்கலவையிலான ஸ்மூத்திஸ்கள்! - weather

வெயில் காலத்தின்போது உடல் சூட்டை தணிக்கவும் ஆரோக்கியமான முறையில் உடலைப் பராமரிக்கவும் நீர்ச்சத்து நிறைந்த பழக்கலவையான ஸ்மூத்திஸை எடுத்துக்கொள்ளலாம்.

Etv Bharat
Etv Bharat

By

Published : Mar 26, 2023, 5:28 PM IST

ஹைதராபாத்: 'நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்' என்ற பழமொழியின்படி வாழப்பழக வேண்டும். குளிர்காலங்களில் மட்டுமின்றி கோடை காலங்களிலும் அதிகளவில் நம் உடல் நோய்வயப்படுகின்றது. கோடை காலங்களில் வெப்பத்தின் அதிகரிப்பால் பலர் நீர்ச்சத்து குறைபாட்டினால் பாதிக்கப்படுகின்றனர். வெயில் காலத்தின்போது உடல் சூட்டை தணிக்கவும் ஆரோக்கியமான முறையில் உடலை பராமரிக்கவும் நீர்ச்சத்து நிறைந்த பழங்கள், ஸ்மூத்திகள் (பால், பழ கலவையில் செய்யப்பட்ட ஜூஸ்) உதவுகின்றன.

கோடை காலம் ஆரம்பித்தாலே நாம் அதிகளவில் ரோட்டோரங்களில் பழம் மற்றும் ஸ்மூத்திஸ் கடைகளை கணிசமாக பார்க்கலாம். இவற்றில் உடலின் வெப்பம் தணிக்க மட்டுமின்றி தேவையான ஊட்டச்சத்துக்களும் நிறைந்துள்ளன. கோடை காலத்தை எதிர்கொள்வதற்கு வீட்டிலேயே ஆரோக்கியமான பழ ஸ்மூத்திஸ்களை எளிதாக செய்யலாம். முக்கியமான ஐந்து பழ ஸ்மூத்திகள் மற்றும் அதில் இருக்கும் ஊட்டச்சத்துகள் பின்வருமாறு,

புளூ பெர்ரி ஸ்மூத்திஸ்:

புளூ பெர்ரி ஸ்மூத்திஸ்

அதிகளவில் நார்ச்சத்து மற்றும் ஆக்ஸிஜினேற்றம் நிறைந்தவை. இவற்றில் தேங்காய் பால் தேன் அல்லது சர்க்கரையை ஸ்மூத்திஸில் சேர்க்கலாம். மேலும் புத்துணர்ச்சிக்காக இவற்றுடன் புதினாவையும் சேர்த்துக்கொள்ளலாம்.

வாட்டர் மெலன் மிண்ட் ஸ்மூத்திஸ்:

வாட்டர் மெலன் மிண்ட் ஸ்மூத்திஸ்

இது உடலை புத்துணர்ச்சியுடனும் அதிக நேரத்திற்கு நீர்ச்சத்துடன் வைத்திருக்கும். தர்பூசணி,வெண்ணிலா தயிர் மற்றும் புதினா இலைகள் சேர்ப்பதனால் புது சுவையைக் கொடுக்கின்றது.

மாம்பழ ஸ்மூத்திஸ்:

மாம்பழ ஸ்மூத்திஸ்

மாம்பழங்களில் நார்சத்து மற்றும் வைட்டமின் சி நிறைந்துள்ளது. சுவையுடன் அதிகளவில் சத்து நிறைந்துள்ளதனால் பெரும்பாலும் இவ்வகையான ஸ்மூத்திஸ்கள் குழ்ந்தைகளுக்கு கொடுக்கப்படுகின்றது.

ஸ்ட்ராபெர்ரி - சியா ஸ்மூத்திஸ்:

ஸ்ட்ராபெர்ரி -சியா ஸ்மூத்திஸ்

ஸ்ட்ராபெர்ரி ஸ்மூத்திஸில் தேங்காய் பால், ஓட்ஸ், சர்க்கரை சேர்ப்பதால் புரதச்சத்து, வைட்டமின், நீர்ச்சத்து போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருக்கின்றன.

திராட்சை பெர்ரி ஸ்மூத்திஸ்:

திராட்சை பெர்ரி ஸ்மூத்திஸ்

திராட்சை மற்றும் பெர்ரி ஸ்மூத்திஸில் வைட்டமின், மெக்னீஷியம், பொட்டாசியம் போன்ற ஊட்டச்சத்துகள் அதிகளவில் இருப்பதால் நீண்ட நேரத்திற்கு உடலை ஆக்ஸிஜினேற்றத்துடன் வைத்திருக்கும்.

இதையும் படிங்க:பிளட் பிரஷரை அதிகரிக்கும் வாகன இரைச்சல்.. மக்களே உஷார்..

ABOUT THE AUTHOR

...view details