இது குறித்து ஆயுஷ் அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "ஆயுர்வேத மருத்துவத்தில், தூக்கமின்மை நோயாளிகளிடன் 'அனிட்ரா' என்னும் தலைப்பின்கீழ் ஆய்வு நடத்தப்பட்டது.
இந்த ஆய்வினை தேசிய ஆயுர்வேத நிறுவனத்தின் பஞ்சகர்மா துறை பேராசிரியர் கோபேஷ் மங்கல், முதுநிலை ஆய்வு மாணவர்கள் நிதி குப்தா, பிரவேஷ் ஸ்ரீவஸ்தவா ஆகியோர் நடத்தினர்.
இதில் தூக்கிமின்மை கோளாறுகளான மயக்கம், சோர்வு, தூக்க நேரம் உள்ளிட்டவற்றிற்கு பஞ்சகர்மா மூலம் மருத்துவம் அளிக்கப்பட்டது. குறிப்பாக இந்த ஆய்வில் நோயாளிகளுக்கு ஷிரோதாரா, அஸ்வகந்தா தைலா உள்ளிட்ட மருந்துகள் கொடுக்கப்பட்டன.
இது தொடர்பாக, இன்ஸ்டிடியூட் ஆப் ஆயுர்வேதம் ஷில்லாங் நடத்திய ஆய்விலும், ஆயுர்வேதத்தில் தூக்கமின்மை நோயாளிகளின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. தூக்கமின்மையை ஆயுர்வேதம் மருத்துவ முறைகள் விரைவாக குணப்படுத்தும்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:கரோனா பாதிப்பு, தூக்கமின்மை- எச்சரிக்கை விடுக்கும் மனநல மருத்துவர்