நமது உடலில் ஏற்படும் பாதிப்புகளை கை, கால்களில் உள்ள நகங்களை வைத்தே எளிதாக அறிந்துகொள்ளலாம். நகங்களில் ஏற்படும் நிற மாற்றங்கள், பல்வேறு பாதிப்புகளுக்கான அறிகுறிகளாக அமைகின்றன. அதனால்தான், மருத்துவர்கள் பரிசோதனைக்குச் செல்கையில் நாக்கின் கீழ்புறத்தைப் பார்ப்பது மட்டுமின்றி நகங்களையும் பார்க்கின்றனர்.
எனவே, நகங்களில் ஏற்படும் மாற்றங்களை அலட்சியப்படுத்தாமல் உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது எனக் கூறப்படுகிறது. வெள்ளை நகங்கள், நீள நகங்கள், மஞ்சள் நகங்கள் என அனைத்தையும், கல்லீரல் நோய், நுரையீரல் பாதிப்பு, இதயம் போன்றவற்றுடன் தொடர்புப்படுத்தலாம். இதைப் பற்றி மேலும் தெரிந்துகொள்வோம்.
வெளிர் நகங்கள் (Pale Nails)
வெளிர் நகங்கள் ரத்த சோகை, ஊட்டச்சத்து குறைபாடு, இதய செயலிழப்பு, கல்லீரல் பாதிப்பு போன்ற சில கடுமையான நோய்களுக்கான அறிகுறியாக இருக்கக்கூடும்
மஞ்சள் நிற நகங்கள் (Yellow Nails)
நகங்கள் மஞ்சள் நிறத்தில் மாறுவதற்கு காரணம் புஞ்சை தொற்றுதான். இதனை கவனிக்காமல் விட்டுவிட்டால், தொற்று பாதிப்பு மோசமடைந்து, நகங்கள் உடைந்துபோதல், தடினமாக மாறுதல் போன்ற தொந்தரவுகள் ஏற்படலாம்.
தரம் இல்லாத நெயில் பாலிஷ் உபயோகித்தாலும், இத்தகைய பிரச்சினை ஏற்படலாம் எனக் கூறப்படுகிறது. நகங்கள் உடைந்துபோதல், தடினமாக மாறுதல், சொரியாஸிஸ் போன்ற பல்வேறு தொந்தரவுகள் ஏற்படலாம்.
விரிசல் நகங்கள் (Split or Cracked Nails)
நகங்கள் எளிதில் காயமடைந்தால், ஊட்டச்சத்து குறைபாட்டின் அறிகுறியாகவும் இருக்கலாம். ஆய்வு முடிவுகள், இதனை தைராய்டு நோயுடன் குறிக்கிறது. அதுவே உடைந்துபோய் மஞ்சள் நிறத்துடன் நகங்கள் தென்பட்டால் பூஞ்சை தொற்றின் அறிகுறியாகும்.