ஆப்பிரிக்காவில் 2020ஆம் ஆண்டில் 6,20,000க்கும் அதிகமான மக்கள் மலேரியா நோயால் உயிரிழந்தனர். அதேநேரம் 241 மில்லியன் மக்கள் மலேரியா நோயினால் பாதிக்கப்பட்டனர். இதில் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளே அதிகம். இதனிடையே உலக சுகாதார நிறுவனம் அங்கீகரித்த மலேரியா தடுப்பூசி 30% செயல்திறன் கொண்டதாக வெளிவந்தது.
மேலும் இதனை நான்கு டோஸ்களாக எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த நிலையில் யு.எஸ்.நேஷ்னல் இன்ஸ்டிடியூட் ஆப் ஹெல்த், புதிய ஆன்டிபாடி சோதனைக்காக மலேரியா அதிகமாக தாக்கும் ஆப்பிரிக்காவின் மாலியில் உள்ள கிராமங்களான கலிஃபபோகோ மற்றும் டுரோடோ ஆகியவற்றில் வசிக்கும் மக்களை சோதனைக்கு உட்படுத்தியது.
இவர்கள் வாரத்திற்கு இரு முறையாவது மலேரியா கொசுக்களால் தாக்கப்படுகின்றனர். மேலும் தடுப்பூசி செலுத்தப்பட்ட நபர்களிடம் இருந்து பெறப்பட்ட ஆன்டிபாடிகளைக் கொண்டு மலேரியா தடுப்பு ஆன்டிபாடிகளை இந்நிறுவனத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் தயார் செய்துள்ளனர்.