OAS1 எனப்படும் இந்த மரபணு மாறுபாடு, ஒட்டுமொத்த மக்கள்தொகையில் 3-6 விழுக்காடு நபர்களில் அல்சைமர் நோய் அபாயத்தை அதிகரிக்கிறது. இதே மரபணு மாறுபாடு, கடும் கரோனா பாதிப்புகளையும் ஏற்படுத்தவல்லது.
இது குறித்து பேசியுள்ள குயின் ஸ்கொயர் இன்ஸ்டிடியூட் ஆப் நியூரோலஜியின் முன்னணி நரம்பியல் மருத்துவரும் எழுத்தாளருமான டெர்விஸ் சாலிஹ், "அல்சைமர்ஸ், மூளைப் பகுதியில் தீங்கு விளைவிக்கும் வகையில் தேங்கும் அமிலாய்டு புரதத்தால் தோன்றுகிறது. கடுமையான கரோனா தொற்று உள்ள நோயாளிகளுக்கு மூளையில் வீக்கம் ஏற்படலாம்.
அல்சைமர்ஸ், கரோனா ஆகிய இரண்டு நோய்களிலும் நோயெதிர்ப்பு மண்டலத்தில் ஏற்படும் பொதுவான மாற்றங்கள் சிலவற்றை நாங்கள் கண்டறிந்துள்ளோம். அல்சைமர்ஸ், கரோனா இரண்டின் அபாயங்களையும் அதிகரிக்கக்கூடிய, நோயெதிர்ப்பு மண்டலத்தில் அதிக எதிர்வினையாற்றும் மரபணு ஒன்றை நாங்கள் அடையாளம் கண்டறிந்துள்ளோம்" என மருத்துவ இதழ் ஒன்றில் அவர் தெரிவித்துள்ளார்.