அமெரிக்கா பாஸ்டனில் உள்ள ஆய்வுக்குழு ஒன்று, இது தொடர்பான ஆராய்ச்சிகளை மேற்கொண்டது. அந்த ஆராய்ச்சியில் காற்று மாசுபாட்டிற்கும் கரோனா அதிகரிப்புக்கும் தொடர்பு இருக்கிறதா என ஆராய்ச்சி மேற்கொண்டனர்.
காற்று மாசுபாடு சுவாசத்தில் ஏற்படுகிற தொடர்களுக்கும் ஏதேனும் தொடர்பிருக்கிறதா என்றும் ஆராயப்பட்டது. இந்த ஆராய்ச்சியில் தொற்று காரணமாக ஏற்பட்ட உயிரிழப்புகளில் 15 விழுக்காடு காற்று மாசுபாடு பங்கு அளித்ததாக கண்டறிந்தனர்.
எவையெல்லாம் சுவாச நோயினை அதிகப்படுத்துகின்றன தெரியுமா?
தொழிற்சாலைகள், வீடுகள், நான்கு சக்கர வாகனங்களில் இருந்து வரும் மோசமான மாசுபாடு ஏற்படுத்தும் துகள்கள், நச்சு வாயுக்கள், சுவாசத் தொற்று நோய்களை மோசமடையச் செய்கிறது என்பது கண்டறியப்பட்டது.
முன்னதாக ஜெர்மன் விஞ்ஞானிகள் மேற்கொண்ட ஆராய்ச்சியில் காற்றில் அதிக அளவு கலக்கும் நைட்ரஜன் டையாக்சைட் எனப்படும் வாயுவால், சுவாசக்கோளாறுகள் ஏற்படுவதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அதிக அளவிலான உயிரிழப்புகள் ஏற்படுகின்றன.
ஆராய்ச்சியாளர்கள் கூறுவது என்ன?
இது முழுமையாக நிரூபிக்கப்படவில்லை என்றாலும், அதிகப்படியான காற்று மாசுபாடு இருக்கும் பகுதிகளில் செல்ல வேண்டாம் என ஆராய்ச்சியாளர்கள் அறிவுறுத்துகின்றனர். ஏனென்றால் காற்று மாசுபாடு நோய் எதிர்ப்புச் சக்தியை பாதித்து, தொற்று ஏற்பட வழி வகுக்கும்.
இதன் காரணமாக இதயநோய்கள், நீரிழிவு நோய்கள் ஏற்படக்கூடும். இந்த ஆராய்ச்சிகளின் முடிவில் காற்று மாசுபாடு போன்ற உலகளாவிய ஒரு பிரச்னைக்குத் தீர்வு கண்டு சுவாச ஆரோக்கியத்தை மேம்படுத்த விஞ்ஞானிகள் வலியுறுத்துகின்றனர்.
இதையும் படிங்க:உடல் பருமனுக்கு ஆயுர்வேத மருத்துவர்கள் என்ன சொல்கிறார்கள்?