தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sukhibhava

மருத்துவத்துறையில் AI-யின் அசத்தல் பங்கீடு: X-ray ஆய்வு வல்லுநர்களின் நிலை கேள்விக்குறியா?

நுரையீரல் புற்றுநோய்களைக் கண்டறிவதில் துல்லியமான கணிப்பை எட்ட செயற்கை நுண்ணறிவு (A1) X-ray ஆய்வு வல்லுநர்ககளுக்கு உதவுவதாக ஆய்வில் தகவல் வெளியாகி உள்ளது.

Etv Bharat
Etv Bharat

By

Published : Jun 28, 2023, 5:19 PM IST

இல்லினாய்ஸ் (அமெரிக்கா): மருத்துவத்துறையில் பல்வேறு அதிநவீன மாற்றங்கள் வந்துகொண்டேதான் இருக்கின்றன. புதுவிதமான நோய்களும், அதை எதிர்கொள்ள புதுவிதமான ஆய்வுகளும் நாள்தோறும் மருத்துவத்துறையில் நிகழும் சாதாரண நிகழ்வாக மாறி இருக்கிறது.

இந்நிலையில்தான் மருத்துவத்துறையில் X-ray துறையில் செயற்கை நுண்ணறிவின் ஆற்றல் மிக்க செயல்திறன் குறித்து அமெரிக்காவின் கதிரியக்க சங்கத்தின் இதழான RSNA-வில் ஆய்வுக் கட்டுரை ஒன்று வெளியாகி உள்ளது. அதில், X-ray ஆய்வை மனிதர்களை விட மிக துல்லியமாக செயற்கை நுண்ணறிவு (AI) அல்காரிதம் கண்டு பிடிப்பதாக குறிப்பிட்டுள்ளது.

மருத்துத்துறையில் செயற்கை நுண்ணறிவு வரவேற்கப்பட்டாலும் X-ray ஆய்வு வல்லுநர்களின் பணி பாதிக்குமோ என்ற கேள்வியும் எழுந்துள்ளது. ஆனால், இதற்கு நேர் மாறான கருத்தை அமெரிக்காவின் சியோல் நேஷனல் பல்கலைக்கழகத்தின் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். அதாவது, செயற்கை நுண்ணறிவு உதவியுடன் மார்பக X-ray-யில் நுரையீரல் பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

அதேபோல் அந்த ஆய்வை, 5 முதல் 18 வருடம் அனுபவம் மிக்க 20 X-ray ஆய்வு வல்லுநர்கள் மற்றும் 10, 20 X-ray ஆய்வு உதவியாளர்கள் கொண்டு 120 மார்பக X-ray ஆய்வு செய்யப்பட்டது. சராசரியாக 67 வயதுடையோர்களிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்ட நிலையில், 120-ல் 60 பேர் நுரையீரல் புற்றுநோய் உள்ளவர்கள். அதில் 32 ஆண்கள் உட்படுவர். மேலும் 60 பேர் கட்டுப்படுத்தப்பட்டவர்கள்.

மேலும், இந்த மார்பக X-ray ஆய்வில் உயர் மற்றும் குறைந்த செயற்கை நுண்ணறிவின் உதவியுடன் X-ray ஆய்வு வல்லுநர்கள் மற்றும் X-ray ஆய்வு உதவியாளர்கள் இரண்டாம் கட்டமாக மீண்டும் ஒரு ஆய்வை மேற்கொண்டனர். அதில் உயர் செயற்கை நுண்ணறிவின் உதவியுடன் ஆய்வு மேற்கொண்டபோது மேலும் துல்லியமான கணிப்பை ஆய்வாளர்களால் எட்ட முடிந்தது. ஆனால், அது ஒவ்வொரு ஆய்வாளர்களுக்கும் இடையே கணிப்பில் சில மாற்றங்களைக் கொண்டிருந்தது. மேலும் குறைந்த செயற்கை நுண்ணறிவின் உதவியைக் கொண்டு ஆய்வு மேற்கொண்டபோது அதன் துல்லியமான கணிப்பு என்பது உயர் செயற்கை நுண்ணறிவின் ஆய்வை விட குறைவாகவே இருந்தது.

இந்நிலையில் மருத்துவத்துறையில் அனைவரின் நம்பிக்கைக்கும் உரிய கருத்தாக செயற்கை நுண்ணறிவுடன் கூடிய கணிப்பே சரியாக இருக்கும் என நம்புவதாக அமெரிக்காவின் சியோலில் உள்ள கதிரியக்கவியல் மற்றும் இன்ஸ்டிடியூட் ஆஃப் ரேடியேஷன் மெடிசின் ஆய்வின் முதன்மை எழுத்தாளர் சாங் மின் பார்க் கூறியுள்ளார்.

செயற்கை நுண்ணறிவின் மீது மக்கள் அதீத நம்பிக்கை கொண்டுள்ளது பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும் முதல் ஆய்வு மற்றும் இரண்டாம் ஆய்வை செயற்கை நுண்ணறிவின் கூற்றோடு ஒப்பிட்ட பார்க், (0.63 எதிராக 0.53) தனித்தன்மை, (0.94 மற்றும் 0.88) மனித ஆய்வுக்கும் செயற்கை நுண்ணறிவின் ஆய்வுக்கும் இடையே பெரிய வித்தியாசம் இல்லை எனவும்; மனித ஆய்வைத் தாண்டி ஒரு ஆய்வில் உறுதி கொள்ள செயற்கை நுண்ணறிவை ஏற்றுக்கொள்ளலாம் என்றும் கூறியுள்ளார்.

மேலும், உயர் செயற்கை நுண்ணறிவுத் திறனை மருத்துவத்துறையில் மேற்கொள்ளும்போது, அதன் வரையறை பணி மற்றும் அது பயன்படுத்தப்படும் மருத்துவ சூழலைப் பொறுத்து மாறுபடும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் அதற்கு எடுத்துக்காட்டாக மார்பக X-ray-வில் அசாதாரண தாக்கங்கள் இருந்தால் அதை செயற்கை நுண்ணறிவு துல்லியமாக கணிக்கும் எனத் தோன்றலாம்.

ஆனால், நடைமுறையில், நுரையீரல் காசநோய் உள்ளிட்ட ஆய்வின்போது அதிகப்படியான ஆய்வுகளை செயற்கை நுண்ணறிவு மூலம் மேற்கொள்கிறோம் என்றால் பணிச்சுமையை குறைக்குமே தவிர, அனைத்து ஆய்வுகளிலும் வரையறுக்கப்பட்ட மதிப்பீட்டையே அது வழங்கும் எனக்கூறியுள்ளார்.

எனவே, மருத்துவத்துறையில் செயற்கை நுண்ணறிவின் பங்கீடு ஆற்றல் மிக்க பணியைச் செய்தாலும் X-ray ஆய்வு வல்லுநர்கள் மற்றும் மருத்துவர்கள் உள்ளடக்கிய இறுதிகட்ட கணிப்பே சரியாக இருக்கும் எனவும்; அதன் அடிப்படையில் நோயாளிக்கு சிகிச்சை வழங்குவதே சரியாக இருக்கும் எனவும் டாக்டர் பார்க் கூறியுள்ளார்.

இதையும் படிங்க:பிறவியிலேயே சர்க்கரை நோய்; தவிர்க்க ஆலோசனை கூறும் ஆய்வாளர்கள்!

ABOUT THE AUTHOR

...view details