சென்னை:உலகம் நவீனமயமாதலைத் தொடர்ந்து எல்லா செயல்களிலும் இந்த நவீனம் என்பது உருவாகி வருகிறது. நவீனம் என்பது காலையில் எழுந்து பல் துலக்குதலில் இருந்து தொடங்குகிறது. செங்கற்பொடி, பல்பொடியாகி, பற்பசையாகி தற்போது மவுத் வாஷாக உருப்பெற்றது. அது போல குளிப்பதற்கு கரம்பை மண், கடலை மாவு, நலங்கு மாவு போன்றவற்றை பயன்படுத்திக் கொண்டிருந்த நமக்கு சோப் அறிமுகமானது. இப்போது பாடி வாஷ் (Body Wash), ஷவர் ஜெல் (shower Gel) போன்றவை சந்தைக்கு வந்துவிட்டன.
சோப் உபயோகப்படுத்த விரும்பாத பலர், பாடி வாஷ் மற்றும் ஷவர் ஜெல் உபயோகப்படுத்துவதற்கு விரும்புகின்றனர். ஆனால் பாடி வாஷ் மற்றும் ஷவர் ஜெல் இந்த இரண்டில் எது பெஸ்ட்?, இந்த இரண்டிற்கும் உள்ள வித்தியாசம் என்ன? இதன் நன்மைகள் என்ன? என்று குழம்புகின்றனர். இந்த செய்தித் தொகுப்பில், பாடி வாஷ் மற்றும் ஷவர் ஜெல் இந்த இரண்டிற்கும் உள்ள வித்தியாசம் என்ன? இதன் நன்மைகள் என்ன? என்று பார்க்கலாம்.
சோப்பை விட பாடி வாஷ் மற்றும் ஷவர் ஜெல் பெஸ்ட்:சோப்பை மீண்டும் மீண்டும் பயன்படுத்தும் போது, சோப்பில் நீர் பட்டு, அதில் பாக்டீரியாக்களும், பூஞ்சைகளும் உருவாகக்கூடிய வாய்ப்பு உள்ளது. இதனால் தோல் நோய்கள் ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. குடும்பத்தில் உள்ள எல்லாரும் சோப்பை உபயோகப்படுத்த முடியாது.
ஏனெனில் ஒருவர் பயன்படுத்தியதை மற்றொருவர் பயன்படுத்தினால், அதன் மூலம் பல்வேறு நோய் தொற்றுகள் ஏற்படவும் வாய்ப்புள்ளது. ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு எளிதாக எடுத்தும் செல்ல முடியும். சோப்புடன் ஒப்பிகையில் பாடி வாஷ் மற்றும் ஷவர் ஜெல்லை எளிதாக பயன்படுத்த முடியும். நேரத்தை மிச்சப்படுத்த முடியும். சோப்பை விட குறைவான pH அளவை உடையது.
பாடி வாஷ் (Body Wash):பாடி வாஷ் என்பது திரவ வடிவிலான ஒரு க்ளன்சிங் பொருள் (Cleansing Product). இதில் ஹார்ஷான பொருட்கள் ஏதும் இல்லாததால் சரும பாதிப்புகள் ஏதும் ஏற்படாது. குளித்த பின் சருமம் வறண்டு காணப்படுவது, சருமத்தில் அரிப்பு போன்றவை ஏற்படாது. ஏனெனில் பாடி வாஷ் சருமத்திற்கு ஈரப்பதத்தை வழங்குகிறது.