வாஷிங்டன் : அமெரிக்காவை சேர்ந்த வெஸ்டர்ன் ரிசர்வ் மருத்துவ பல்கலைக்கழகம் ரத்தத்தில் கெட்ட கொழுப்பு அளவை குறைப்பதற்கான புதிய வாய்வழி மருந்தை கண்டுபிடித்துள்ளது.
இதில் சுமார் 70 சதவீத கெட்ட கொழுப்பை குறைப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.இந்த மருந்தை தயாரிக்க நைட்ரிக் அமிலம் பயன்படுத்தப்படுகிறது.
இது புற்றுநோயைக் குணப்படுத்த கொடுக்கப்பட்டும் நோய் எதிர்ப்பு சிகிச்சைகளின் செயல்திறனை அதிகரிக்கக்கூடும் என்றும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
ரத்தத்தில் கெட்ட கொழுப்பு அதிக அளவில் சேரும் போது மூச்சுத்திணறல், தலைசுற்றல் மற்றும் மாரடைப்பு, பக்கவாதம் உள்ளிட்டவை ஏற்படும் அபாயம் உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: இதயநோய் மற்றும் பக்கவாத அபாயத்தை குறைக்கும் காலை உடற்பயிற்சி... ஆய்வில் புதிய தகவல்...