ஹைதராபாத்: கிழக்காசிய நாடுகளில் 20 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கரோனா வைரஸ் பரவல் இருந்ததாக ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி, கரோனா வைரஸ் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இருந்துள்ளது. இது குறித்து அரிசோனியா பல்கலைக்கழக பரிணாம உயிரியலாளர் டேவிட் எனார்ட் (David Enard), “இதைப் பற்றி கவலைப்பட வேண்டியதில்லை” என்றார்.
கரோனா வைரஸ்
மேலும், “இன்று நடப்பது அன்றைய தலைமுறையினருக்கும் நடந்துள்ளது” என்றார். தொடர்ந்து, “தற்போதுவரை வைரஸ்கள் குறித்த ஆராய்ச்சிகள் நடந்துவருகின்றன. எனினும் இக்கிருமிகளின் குடும்பங்களை நாம் சரியாக வகைப்படுத்த முடியவில்லை.
கரோனா வைரஸ்கள் மனிதர்களை பாதித்து, கடுமையான சுவாசப் பிரச்சினைகளை ஏற்படுத்துகின்றன. கடந்த காலங்களில் கோவிட், சார்ஸ் உள்ளிட்ட வகை வைரஸ்கள் நம்மை தாக்கியுள்ளன. இந்த வைரஸ்கள் பாலூட்டி வகை விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு பரவி இருக்கலாம். அந்த வகையில் வௌவால்கள் மிக முக்கியமானதாக கருதப்படுகின்றன.
மரபணு மாற்றம்
சில வகை கரோனா வைரஸ்கள் சளி பாதிப்பை மட்டுமே ஏற்படுத்தும். சில நேரங்களில் லேசான சளி பாதிப்பு மட்டுமே காணப்படும். இந்த நோய்க் கிருமிகள் குறித்து தொடர்ச்சியாக ஆய்வுகள் நடத்திவருகிறோம். மரபணு மாற்றங்களை கவனித்துவருகிறோம்.
இதன் மூதாதையர் வைரஸ்கள் குறித்தும் ஆய்வுகள் நடத்திவருகிறோம். இந்த கரோனா வைரஸ்கள் 1950களிலிருந்து மாற்றம் பெறத் தொடங்கியிருக்கலாம். இதை நாம் HCoV-NL63 என அழைக்கிறோம்.
பரிணாம வளர்ச்சி
பல தலைமுறைகளாக, வைரஸ்கள் மனித மரபணுவில் மிகப்பெரிய அளவிலான மாற்றத்தை ஏற்படுத்துகின்றன. ஒரு வைரஸுக்கு எதிராக நோயெதிர்ப்பை ஏற்படுத்த ஒரு சீரற்ற புதிய பிறழ்வு நிகழும்போது, அது ஒரு தலைமுறையிலிருந்து அடுத்த தலைமுறைக்கு விரைவாக பொதுவானதாகிவிடும்.
இதனை விஞ்ஞானிகள் அறிந்திருக்கிறார்கள், இது கடந்த காலங்களில் விரைவான பரிணாம வளர்ச்சியின் மாற்றமாகும்” என்றார். சமீபத்திய ஆண்டுகளில், டாக்டர் எனார்டும் அவரது சகாக்களும் வைரஸின் வரலாற்றை மறுகட்டமைப்பதற்காக இந்த மரபணு மாறுபாட்டின் வடிவங்களுக்கு மனித மரபணுவைத் தேடினர்.
கிழக்காசிய நாடுகள்
அப்போது அவர்களுக்கு பண்டைய கால கரோனா வைரஸ்கள் குறித்து தெரியவந்தன. மேலும் இந்த வைரஸ்கள் தற்போது பரிணாம வளர்ச்சியடைந்துவிட்டன. இந்த ஆராய்ச்சிக்கு இவர்கள் உலகெங்கிலும் உள்ள 26 வெவ்வேறு மக்கள்தொகைகளில் ஆயிரக்கணக்கான மக்களின் டி.என்.ஏவை ஒப்பிட்டு பார்த்தனர்.
அதில், கரோனா வைரஸ்களுக்கு முக்கியமானவை என்று அறியப்பட்ட மரபணுக்களையும் பார்த்தார்கள். அப்போது, கிழக்கு ஆசிய மக்களில், 42 மரபணுக்களில் கரோனா வைரஸ்கள் ஆதிக்கம் செலுத்துவதைக் கண்டறிந்தனர். இதுவே, கிழக்கு ஆசியாவில் உள்ள மக்கள் ஒரு பண்டைய கரோனா வைரஸுக்கு பாதிக்கப்பட்டனர் என்பதை கண்டறிய வலுவான சமிக்ஞையாக இருந்தது.
20 ஆயிரம் ஆண்டுகள்
மேலும் இந்த மரபணுக்கள் அனைத்தும் 20,000 முதல் 25,000 ஆண்டுகளுக்கு முன்பு உள்ளவை. ஆக 20 முதல் 25 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கிழக்காசிய நாடுகளில் கரோனா பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளன.
மேலும் 20 முதல் 25 ஆண்டுகளுக்கு முன்பு கிழக்காசியாவில் மக்கள் அடர்த்தியாக வசிக்கவில்லை என்பதையும் ஆராய்ச்சியாளர்கள் கூறினார்கள். தற்போதைய காலக்கட்டத்தில், “சீனா, ஜப்பான், மங்கோலியா, வடகொரியா, தென்கொரியா மற்றும் தைவான் உள்ளிட்ட நாடுகள்” கிழக்காசிய நாடுகள் பிராந்தியத்தில் வருகின்றன.
தமிழின் சங்கக் கால புலவரான ஔவையார் பாடல்களில் தொற்றுநோய்கள் குறித்த குறிப்புகள் உள்ளன என்பது நினைவுக் கூரத்தக்கது!
இதையும் படிங்க : 'காக்கா கறி சாப்பிடுற எங்களுக்கு கரோனா வராது...' தடுப்பூசி போட மறுத்த நரிக்குறவர் இன மக்கள்