தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sukhibhava

கோவிட் பெருந்தொற்று காலங்களில் 90 சதவீதம் பேருக்கு பார்வை குறைபாடு! - கண் பரிசோதனை

ஏறத்தாழ பத்தில் ஒன்பது பேருக்கு இந்த நோய்த்தொற்று காலங்களில் பார்வை குறைபாடுகள் அதிகமானதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

நோய்த்தொற்று காலங்களில் 90% பேருக்கு மேல் பார்வை குறைபாட்டால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்
நோய்த்தொற்று காலங்களில் 90% பேருக்கு மேல் பார்வை குறைபாட்டால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்

By

Published : Jan 25, 2022, 5:17 PM IST

டையபெடிக் ரெட்டினோபதி 'Diabetic retinopathy', AMD( Age related Macular Degeneration) போன்ற விழித்திரை நோய்கள் நேரடி மருத்துவ பரிசோதனைகள் மூலம் மட்டுமே தெரிந்துகொள்ள முடியும்.

இந்த நோய்களை தகுந்த நேரத்தில் கவனிக்கவில்லையென்றால் கண்களைப் பெரும் அளவில் பாதிக்க வாய்ப்புள்ளது. இது குறித்து மருத்துவர் அஜய் டுடானி கூறுகையில், ’எதிர்பாராவிதமாக 90 சதவீத நோயாளிகளுக்கு கரோனா ஊரடங்கின் காரணத்தால் தொடர் நேரடி பரிசோதனைக்கு செல்லாததால் கண் பார்வை குறைபாடு சற்று தீவிரம் அடைந்துள்ளது.

குறிப்பாக AMD( Age related Macular Degeneration) நோயாளிகள் இதில் அதிகம் பாதிக்கப்பட்டவர்களாகத் தெரிகிறது. இந்த நோயாளிகள், கட்டாயம் போட்டுகொள்ள வேண்டிய Intravitreal ஊசியைப் போடத் தவறியதால் இது நடந்திருக்கக்கூடும்” எனத் தெரிவித்தார்.

இது குறித்து பெங்களூரைச் சேர்ந்த மருத்துவர் சைத்ரா ஜெயதேவ் கூறுகையில், ”கோவிட் அச்சத்தில் பல நோயாளிகள் செய்ய வேண்டிய தொடர் மருத்துவ பரிசோதனைகளை கடந்த 4 மாதங்களாக செய்யத்தவறியிருக்கின்றனர்.

இதனால் அவர்களின் கண் பார்வை பாதிக்கப்பட்டிருக்கிறது” எனக் கூறினார். உடனடி பரிசோதனை செய்யவில்லையெனில், கண் ஆரோக்கியத்தை தீவிரமாக பாதிப்பிற்கு உண்டாகும் என மருத்துவர்கள் கூறி வருகின்றனர்.

மருத்துவர் மற்றும் விட்ரியோரெட்டினல் சொசைட்டி ஆப் இந்தியாவின்(Viteroretinal society of india)பொதுச் செயலாளருமான ராஜ நாராயணன் கூறுகையில், ”AMD( Age related Macular Degeneration) போன்ற அறிகுறியுள்ள நோயாளிகள் கரோனா அறிகுறிகள் இல்லாத பட்சத்தில் கண்டிப்பாக விரைவில் நேரடி மருத்துவ ஆலோசனைப் பெறுவதே நல்லது.

மேலும், தொலைபேசி மூலம் மருத்துவ ஆலோசனைகள் பெறுவது மற்றும் வீட்டில் இருந்த படி தன்களுக்கு தாங்களே கண் பரிசோதனை செய்யக்கூடிய முறைகளும் உள்ளது. அதை செய்து ஆவணங்களை மருத்துவர்களுக்கு அனுப்பலாம்.

நோயாளிகள் யாரேனும் கண் பார்வை மங்கிப்போதல், பார்வையில் கரும்புள்ளி தெரிதல் போன்ற அறிகுறிகளில் இருந்தால் நிச்சயம் அவர்கள் நேரடி மருத்துவ ஆலோசனை பெறுவது நல்லது.

இதையும் படிங்க:டாட்டூ போடப்போகிறீர்களா? - இதை கவனிக்கவும்

ABOUT THE AUTHOR

...view details