தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sukhibhava

திருமண சீசனில் சர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்க 7 டிப்ஸ்.. கடைசி டிப்ஸ மறந்துராதீங்க..

திருமண சீசன் தொடங்கிவிட்ட நிலையில் சர்க்கரை நோயை கட்டுக்குள் வைத்திருக்க மருத்துவர்கள் வழங்கிய சில ஆரோக்கிய குறிப்புகள் பின்வருமாறு.

திருமண சீசனில் சர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்க 7 டிப்ஸ்
திருமண சீசனில் சர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்க 7 டிப்ஸ்

By

Published : Feb 24, 2023, 8:38 PM IST

தமிழ்நாடு முழுவதும் திருமண சீசன் தொடங்கிவிட்டது. இந்த சீசனில் இனிப்புகள், துரித உணவுகள் அதிகமாக சாப்பிடக்கூடிய கட்டாயம் வரலாம். அந்த நேரத்தில் சர்க்கரை நோய் உள்ளவர்கள் எவ்வாறு கட்டுப்பாடுடன் இருக்க வேண்டும் என்பதற்கு மருத்துவர்கள் வழங்கிய 7 டிப்ஸ்களை தெரிந்து கொள்ளுங்கள்.

  • மருந்துகள் திட்டம்:நீங்கள் திருமணத்திற்காக வேறொரு மாவட்டத்துக்கு செல்ல வேண்டி இருக்கும் நேரத்தில், நீங்கள் எடுத்துக்கொள்ளும் மருந்துகள் மற்றும் உணவுமுறைகள் குறித்து எழுதி வைத்துக் கொண்டு கையோடு எடுத்துசெல்ல வேண்டும். உங்கள் மருத்துவரிடம் முன்கூட்டியே பேசி ஆலோசனை கூட பெற்றுக்கொள்ளலாம். இதன் மூலம் எதிர்பாராத நிகழ்வுகளை சமாளிக்க தயாராக இருக்க முடியும். குறிப்பாக, உங்களுக்குத் தேவையான மருந்துகளையும் மருந்து சீட்டுகளையும் எடுத்து செல்ல மறந்துவிடாதீர்கள்.
  • நெருங்கியவர்களுடன் செல்லுதல்: திருமணத்தில் கலந்துகொள்ளும் போது உங்களது நீரிழிவு சிகிச்சை குறித்து நன்கு அறிந்த நண்பரையோ, குடும்பத்தினரையோ அழைத்து செல்வது நல்லது. இவர்கள் உங்களின் மருந்து சாப்பிடும் நேரத்தையும், உணவுக் கட்டுப்பாட்டையும் உங்களுக்கு அடிக்கடி நினைவுப் படுத்துவார்கள்.
  • முன்னேற்பாடுகள்: திருமணத்துக்கு செல்லும் முன்பே காலையில் உடற்பயிற்சி அல்லது யோகாவை செய்ய தொடங்குங்கள். ஒருவேளை திருமண வீட்டிலோ மண்டபத்திலோ இருந்தால் கூட காலையில் உடற்பயிற்சி செய்வதை மறக்காதீர்கள். அதேபோல காலையில் கார்போஹைட்ரேட், நார்ச்சத்து நிறைந்த சிற்றுண்டியை உண்ணுங்கள். உணவு திட்டங்கள் இருந்தால் கட்டாயம் பின்பற்ற வேண்டும்.
  • சர்க்கரை அளவை கண்காணித்தல்: நீரிழிவு நோய்க்கு தொடர்ச்சியான கண்காணிப்பு அவசியம். தேவைப்பட்டால் குளுக்கோஸ் கண்காணிப்பு சாதனங்களை கையோடு எடுத்து செல்லாம். இதன் மூலம் சர்க்கரை அளவின் ஏற்றத்தாழ்வுகளை முன்கூட்டியோ கவனிக்க முடியும். அதற்கேற்ப திட்டங்களை வகுக்க முடியும்.
  • உணவு பராமரிப்பு: திருமணத்தின் போது, சாலட் அல்லது மாவுச்சத்து இல்லாத காய்கறிகளை உண்ணவும். தானியங்கள், சப்பாத்தியை உண்ணலாம். குறிப்பாக வறுத்த அல்லது கிளறிய உணவுகளை சாப்பிட வேண்டும். இனிப்பு தேவைப்பட்டால், பழங்கள் அல்லது சர்க்கரை அல்லாத பண்டகளை தேர்வு செய்ய வேண்டும்.
  • கட்டுப்பாடுகள்: நீங்கள் கேண்டி அல்லது கேக்கை சாப்பிட விரும்பினால், சிறிய பிஸை மட்டும் எடுத்துக்கொள்ள வேண்டும். மது அருந்தலாம், அதுவும் சிறிதளவே எடுத்துக்கொள்ள வேண்டும். ஆனால், அதிகளவு தண்ணீர் குடிப்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
  • தள்ளி இருத்தல்: நீங்கள் திட்டமிட்டதை விட சற்று அதிகமாக சாப்பிடவோ, குடிக்கவோ நேர்ந்தால், உடனடியாக அந்த இடத்தை விட்டு விலகிச்செல்ல வேண்டும். மாடிக்கு செல்லாம், குடும்பத்தாருக்கு கால் செய்து பேசலாம்.

ABOUT THE AUTHOR

...view details