கண்ணுக்கு கீழ் நாம் காணும் கரு வளையங்கள், பல்வேறு காரணங்களால் ஏற்படுகின்றன. ஆரோக்கியமற்ற உணவு, தூக்கமின்மை, நீண்டகால நோய், மருந்துகள் காரணமாகவும் கரு வளையம் ஏற்படலாம். ஆனால் கரு வளையங்கள் ஒருவரின் முகத்தோற்ற அழகைக் குறைப்பதால் பலரும் அதிலிருந்து விடுபட பெரும் முயற்சி எடுக்கின்றனர்.
இந்நிலையில், நமது ஈடிவி பாரத் குழு, SASA ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி மருத்துவர் யாஸ்மினிடம் கரு வளையங்கள் குறித்த சில குறிப்புகளைக் கேட்டறிந்தது. அவர் கூறியவை பின்வருமாறு:
”முதலாவதாக கரு வளையத்தை ஏற்படுத்தும் காரணிகளை கண்டறியுங்கள். வாழ்க்கை முறை அல்லது உணவு போன்ற காரணங்களால் கரு வளையம் ஏற்பட்டால் அதனை சரி செய்யலாம். நல்ல ஆரோக்கியமான உணவை உட்கொள்வது, சரியான நேரத்தில் தூங்குவது, செல்போன் உபயோகப்படுத்துவதை குறைத்துக் கொள்வது, உடலில் நீர் சக்தியை தக்கவைத்துக் கொள்வது, புகைப்பிடித்தலை தவிர்ப்பது போன்றவற்றை கடைபிடிக்க வேண்டும்.
சில நேரங்களில், வெயிலில் சுற்றுவதால் கூட கரு வளையம் ஏற்படலாம். அதனால், வெளியில் செல்லும்போது சன்கிளாஸ் அணிவது, சன் ஸ்கிரீன் போன்றவற்றை உபயோகப்படுத்துங்கள்.
வெள்ளரிக்காய்:
வெள்ளரிக்காயை இரண்டு துண்டுகளாக வெட்டி பத்து நிமிடங்கள் கண்களில் வையுங்கள். வெள்ளரிக்காயின் குளிரூட்டும் தன்மை கண்களுக்கு கீழ் உள்ள கரு வளையங்களை குறைக்க உதவும். கண்களை சுற்றியுள்ள வீக்கத்தைக் குறைக்கவும் உதவும்.
வெள்ளரிக்காய் கண்களுக்கு மிகவும் நல்லது வெள்ளரிக்காயில் அதிக நீர்ச்சத்து உள்ளதால் அதனை உட்கொள்வதன் மூலம் உடலை நீரேற்றமாக வைத்திருக்கலாம். வெள்ளரிக்காயில் வைட்டமின்கள் ஏ, சி, ஈ, கே போன்றவை உள்ளன. கொலாஜனை அதிகரிக்கும் சிலிக்கா போன்றவையும் வெள்ளரிக்காயில் உள்ளதால், அவை இரத்த நாளங்களின் எலாஸ்டிசிட்டியை (elasticity) அதிகரித்து கரு வளையத்தைக் குறைக்க உதவும்.
வெளிப்பூச்சுகள்:
கிரீம்கள் மூலிகைகளை தயார் செய்து கரு வளையங்களின் மேல் தடவினால் கரு வளையங்கள் குறைவதற்கான வாய்ப்புகள் உள்ளன.
ஒரு ஸ்பூன் கடுக்காய் பவுடர், அரை ஸ்பூன் கற்றாழை ஜெல், இரண்டு சொட்டு பாதாம் எண்ணெய் ஆகியவற்றை கலந்து கண்களை சுற்றி மசாஜ் செய்யுங்கள். 15 நிமிடங்கள் கழித்து அது உலர்ந்த பின் குளிர்ந்த நீரில் கழுவுங்கள். இது தவிர்த்து சந்தனக் கலவை, அதிமதுரப் பொடியுடன் தண்ணீர் கலந்த கலவை போன்றவற்றையும் கரு வளையத்தின் மேல் தடவலாம்.
ஆயில் மசாஜ்:
கண்களுக்கு கீழே ரத்த ஓட்டம் இல்லாவிட்டாலும் கரு வளையம் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. இதனால் தேங்காய் எண்ணெய், பாதாம் எண்ணெய், விளக்கெண்ணெய், குங்குமாதி தைலம் போன்றவற்றைக் கொண்டு கண்களை சுற்றி மசாஜ் செய்தால் அது ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். கண்களுக்கு கீழே தடவி 15 நிமிடங்களுக்குப் பிறகு கழுவினால் கரு வளையம் குறையும்.
கண்களுக்கு அழகு சேர்க்கும் தேன் இதையும் படிங்க:பாலியல் ஆரோக்கியத்தை அதிகரிக்கும் உணவுகள்