தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sukhibhava

தீபாவளி பண்டிகையை அலங்கரிக்கும் 5 அழகிய விளக்குகள் - Diwali lights

தீபாவளி பண்டிகையின்போது கண்களுக்கு விருந்து அளிக்கக்கூடிய 5 வித்தியாசமான விளக்குகள் குறித்து பார்க்கலாம்.

தீபாவளி பண்டிகை கொண்டாட்டம்
தீபாவளி பண்டிகை கொண்டாட்டம்

By

Published : Nov 11, 2020, 9:04 PM IST

Updated : Nov 11, 2020, 10:48 PM IST

தீபம் + ஒளி = தீபாவளி. சாதி, மத வேறுபாடு இன்றி அனைவரும் கொண்டாடும் இந்த தீபாவளி பண்டிகை என்றாலே, பட்டாசு, இனிப்பு வகைகள், விளக்கு, புத்தாடை போன்றவைதான் முதலில் நம் நினைவிற்கு வரும். குறிப்பாக, நம்மை நாம் அலங்காரம் செய்துகொள்கிறோமோ, இல்லையோ, நம் வீட்டையும், வீட்டின் வாசலையும் நிச்சயம் அலங்கரிக்கத் தவற மாட்டோம்.

இப்படி நம்பிக்கையும் குதூகலமும் தரும் தீபாவளியை வித்தியாசமான விளக்குகளைக் கொண்டு, கொண்டாட வேண்டாமா! நமது எண்ணம்போல இல்லமும் ஜொலித்திட அகல் விளக்கு மட்டுமல்லாது, பூ விளக்கு, வாசனைத் திரவியம் நிறைந்த விளக்கு, ஜெல்லி விளக்கு, எலெக்ட்ரிக் விளக்கு எனப் பல வகை விளக்குகள் உள்ளன. அவை ஒவ்வொன்றின் சிறப்பையும் தற்போதுப் பார்ப்போம்.

பூ விளக்கு:

வண்ண வண்ண நிறங்களில் பூ வடிவில் இந்த விளக்குகள் கிடைக்கின்றன. பூக்கள் அச்சிடப்பட்ட கிளாஸில் அல்லது பூ வடிவிலேயே செய்யப்பட்ட இந்த விளக்குகள், கட்டாயமாக உங்கள் வீட்டிற்கு புதுப் பொலிவைக் கொடுக்கும்.

வாசனைத் திரவியம் நிறைந்த விளக்கு:

இல்லத்திற்கு ஒளியும், நறுமணமும் தரும் இந்த விளக்குகள் பலருக்கும் பிடித்தமானவை. இந்த விளக்குகளை ஏற்றினால் மனதில் ஒரு வித அமைதி ஏற்படுவதை உணரலாம். நம்பகத் தன்மை கொண்ட இயற்கைப் பொருட்கள் கடைகளில் தான் இதுபோன்ற விளக்கினை வாங்க வேண்டும். வேதிப்பொருட்கள் பயன்படுத்தித் தயாரிக்கப்பட்ட விளக்குகளை அறவே தவிர்த்து விடவும்.

வாசனை திரவம் கொண்ட விளக்கு

ஜெல்லி விளக்கு:

கண்களுக்கு அற்புத விருந்தாக அமையும் இந்த ஜெல்லி விளக்குகள், தெளிந்த கண்ணாடி கண்டெய்னர்களில் கிடைக்கின்றன. இதனை நீண்ட நாட்களுக்கு நாம் பயன்படுத்தலாம். ரங்கோலி வடிவில் இந்த விளக்குகளை வரிசைப்படுத்தி வைத்தால், பார்ப்பதற்கே அவ்வளவு அழகாக இருக்கும்.

ஜெல்லி விளக்கு

மிதவை விளக்குகள்:

ஒரு கண்ணாடி டம்பளரில் தண்ணீர் ஊற்றி, அதில் பூக்களைச் சேர்த்து, அதன் மீது இந்த மிதவை விளக்குகளை வீட்டினுள் வைத்தால், பார்ப்பதற்குக் கவர்ச்சிகரமாக இருக்கும்

மிதவை விளக்கு

எலெக்ட்ரிக் விளக்குகள்:

குழந்தைகள் இருப்பதால் வீட்டில் எண்ணெய் விளக்கு அல்லது கண்ணாடி கண்டெய்னரில் இருக்கும் விளக்குகளை பயன்படுத்த அஞ்சுபவர்கள், எளிமையான எலெக்ட்ரிக் விளக்குகளைப் பயன்படுத்தாலம். பார்ப்பதற்கு அசல் அகல் விளக்கு போலவே, இருக்கும் இந்த விளக்குகள், பைபர், பிளாஸ்டிக் ஆகியவற்றால் செய்யப்பட்டு, நீண்ட நாட்களுக்கு வரும்.

எலெக்ட்ரிக் விளக்கு

இதையும் படிங்க:

கணவனை கொண்டாட கையில் மெஹந்தி... பெண்களுக்கான எளிய டிசைன்கள்!

Last Updated : Nov 11, 2020, 10:48 PM IST

ABOUT THE AUTHOR

...view details