தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sukhibhava

புதிய காதலியிடம் நல்ல பேரு எடுக்க இதை எல்லாம் செய்யாதீங்க..! - ஸ்டோன்வாலிங்

புதிய காதலியிடம் நல்ல பெயர் எடுக்க பழைய காதலியைப் பற்றி தவறாகப் பேசும், அவமதிக்கும் ஆண்கள் கண்ணியமற்றவர்கள் என்றும், இது போல பேசுவதால் பிரிவு ஏற்படும் என்றும் பெண்கள் கூறியுள்ளனர். காதல் உறவு தொடர்பான ஒரு ஆய்வில் இந்த கருத்தை தெரிவித்துள்ளனர்.

women
காதல்

By

Published : Jun 7, 2023, 4:15 PM IST

டெல்லி:குவாக்குவாக் (QuackQuack) என்ற ஆன்லைன் டேட்டிங் செயலி, காதலர்கள், டேட்டிங்கில் இருப்பவர்களிடம் ஒரு ஆய்வை நடத்தியது. அதில், காதல் அல்லது டேட்டிங்கில் இருப்பவர்களுக்கு பிரிவதற்கான காரணங்கள் மற்றும் பிரிவுக்கான அறிகுறிகள் குறித்து கருத்துகள் கேட்கப்பட்டன. மெட்ரோ நகரங்கள் மற்றும் சிறிய நகரங்களைச் சேர்ந்த டேட்டிங்கில் இருக்கும் 20 முதல் 35 வயது கொண்ட மாணவர்கள் மற்றும் பணிக்கு செல்வோரிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது.

முதல் டேட்டிங்:குவாக்குவாக் ஆய்வின்படி, முதல் டேட்டிங்கில் பாட்னரின் விருப்பத்தைக் கேட்காமல் உணவை ஆர்டர் செய்வது எதிர்மறையான அறிகுறி 22 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர். இதுபோல இணையின் விருப்பத்தைக் கேட்காமல் உணவை ஆர்டர் செய்வது ஆதிக்கம் செலுத்துவதன் அறிகுறி என்றும், இது பிரிவுக்கு வழிவகுக்கும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

முன்னாள் காதலியை அவமதித்தல்:புதிய காதலியிடம் நல்ல பெயர் எடுக்க பழைய காதலியைப் பற்றி தவறாகப் பேசுவது எதிர்மறையான அறிகுறி என பெரும்பாலான பெண்கள் தெரிவித்துள்ளனர். தங்கள் மீது எந்த தவறும் இல்லை என காண்பிப்பதற்காக முன்னாள் காதலியை ஆண்கள் அவமதிக்கிறார்கள் என்றும், இதுபோல பேசுவதால் தற்போதைய உறவு முறிந்து போகக்கூடும் என்றும் 22 முதல் 32 வயதுக்குட்பட்ட பெண்களில் 39 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர்.

கட்டுப்படுத்துதல்: ஒரு காதல் உறவை கட்டுப்படுத்தி வைக்க நினைக்கும் ஆண்களும் பெண்களும் பிரிவுக்கு காரணமாக இருப்பார்கள் என 30 வயதுக்கும் மேற்பட்டவர்களில் 38 சதவீதம் பேர் கூறுகின்றனர். காதல் உறவில் அல்லது டேட்டிங்கில் இருப்பதால் ஒருவரை உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப கட்டுப்படுத்தலாம் என்று நினைப்பதும், இவ்வாறு உடை உடுத்த வேண்டும், இவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்று கூறுவதும் முட்டாள்தளம் என்று அவர்கள் கூறுகின்றனர்.

ஸ்டோன்வாலிங்(stonewalling): காதல் உறவில் திடீரென பேசுவதை நிறுத்துபவர்கள், திடீரென தொடர்பு கொள்வதை குறைப்பவர்களை கையாள்வது மிகவும் கடினம் என 25 முதல் 30 வயதுக்குட்பட்ட 29 சதவீத பெண்கள் கூறுகின்றனர். இது போன்ற நடவடிக்கை பிரிவுக்கு காரணமாகும் என்றும் தெரிவித்தனர். இதில் 11 சதவீதம் பேர் இதுபோன்ற நபருடன் உறவில் இருந்ததாகவும், விரைவிலேயே பிரிந்துவிட்டதாகவும் தெரிவித்தனர். இது போன்றவர்கள் நிலைத்தன்மை அற்றவர்கள் என்றும், கற்பனைக்கு அப்பாற்பட்ட வெறுப்பு கொண்டவர்கள் என்றும் அந்த பெண்கள் குறிப்பிட்டனர்.

முதிர்ந்த பெண்கள்: தங்களது தவறுகளை மறுப்பதற்கு பதிலாக ஒப்புக் கொள்ளும் பெண்கள் வலுவான உறவுக்கு காரணமாக இருக்கிறார்கள் என 21 சதவீத ஆண்கள் கூறுகின்றனர். அவர்களுடன் எந்தவித தயக்கமும் இல்லாமல் பழகலாம் என்றும், அவர்கள் முதிர்ச்சி கொண்டவர்களாக இருக்கிறார்கள் என்றும் தெரிவித்தனர்.

உணர்வுகளை பேசுதல்:தங்களது உணர்வுகளை தெளிவாக பேசக்கூடிய ஆண்கள் நல்ல காதல் உறவை பராமரிப்பார்கள் என பெண்கள் கூறுகின்றனர். ஒரு வருடத்திற்கும் மேலாக டேட்டிங் செய்து வரும் பெண்களில் 17 சதவீதத்திற்கும் அதிகமானோர், அதிகம் பேசிக் கொண்டே இருப்பது மோசம் என்றும், அதேநேரம் தங்கள் உணர்வுளை சரியாக சொற்களில் வெளிப்படுத்தத் தெரிந்தவர்கள் அந்த உறவில் நீடித்து இருப்பார்கள் என்றும் கூறினர்.

கேலி, வேடிக்கை கூடாது: உங்களது இணை தனது வாழ்க்கை வாழ்ந்து, உங்களையும் வாழ விட்டால் - உங்களின் உடை, பாவனை எதற்காகவும் உங்களை கேலி செய்யவில்லை என்றால், இதுபோன்ற நபர் கிடைப்பது அதிர்ஷ்டம் என 30 வயதுக்கும் மேற்பட்ட 19 சதவீதம் பேர் கூறுகிறார்கள். அதேபோல் மற்றவர்களின் வாழ்க்கையை வேடிக்கையாகக் கருதுபவர்களை தவிர்க்கவே விரும்புவதாக 8 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: கர்ப்ப காலத்தில் ஏற்படும் மன அழுத்தத்தால் குழந்தையின் பேச்சாற்றல் அதிகரிக்கிறது - ஆராய்ச்சியில் ஆச்சரிய தகவல்

ABOUT THE AUTHOR

...view details