தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sukhibhava

World Homeopathy Day : "ஒரு ஆரோக்கியம் ஒரே குடும்பம்" - உலக ஹோமியோபதி தினம் கடைபிடிப்பு!

இன்று உலக ஹோமியோபதி தினம் கொண்டாடப்படுகிறது. "ஒரு ஆரோக்கியம், ஒரே குடும்பம்" என்ற கருப்பொருளை மையமாக கொண்டு உலக ஹோமியோபதி தினம் கடைபிடிக்கப்படுகிறது.

World Homeopathy Day
World Homeopathy Day

By

Published : Apr 10, 2023, 8:07 AM IST

ஐதராபாத் : உலக ஹோமியோபதி தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது. ஹோமியோபதி மருந்து மற்றும் ஹோமியோபதி மருத்துவ முறையால் குணமடைந்தவர்களின் அனுபவங்களை பகிர்ந்து கொள்ளும் விதமாக உலக ஹோமியோபதி விழிப்புணர்வு அமைப்பால் ஆண்டுதோறும் ஏப்ரல் 10 ஆம் தேதி உலக ஹோமியோபதி தினம் அனுசரிக்கப்படுகிறது.

இலவச பொது நிகழ்வுகள், விரைவுரைகள், கருத்தரங்குகள், ஊடக நேர்கானல்கள், இலவச மற்றும் குறைந்த விலையிலான மருத்துவ பரிசோதனைகள் உள்ளிட்டவற்றின் மூலம் உலக அளவில் ஹோமியோபதி ஊக்குவிக்கப்பட்டு வருகிறது. ஹோமியோபதியின் பயன்பாடுகள், பலன்கள் குறித்து சமூக வலைதள பக்கங்கள், நேரலை ஊடகங்கள் மூலம் தகவல் சார்ந்த மற்றும் சான்றுகள் பகிரப்பட்டு வருகின்றன.

ஜெர்மனை சேர்ந்த மருத்துவர் கிறிஸ்டியன் பிரட்ரிச் ஹனிமன் என்பவர் ஹோமியோபதி மருத்துவத்தின் முன்னோடியாக கருதப்படுகிறார். ஹோமியோபதி மருத்துவத்திற்காக ஹமனிமன் ஆற்றிய தொண்டு மற்றும் ஈடுபாடுகளுக்கு மதிப்பு கொடுக்கும் வகையில் அவரது பிறந்த தினமான ஏப்ரல் 10 ஆம் தேதி உலக ஹோமியோபதி தினமாக கொண்டாடப்படுகிறது.

உலக ஹோமியோபதி விழிப்புணர்வு அமைப்பால் கடந்த 2005 ஆம் ஆண்டு டெல்லியில் நடந்த அதன் மாநாட்டில், ஏப்ரல் 10 ஆம் தேதியை உலக ஹோமியோபதி தினமாக கொண்டாடுவது குறித்து ஆலோசிக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்டது. உலக ஹோமியோபதி விழிப்புணர்வு அமைப்பு என்ற தொண்டு நிறுவனம் உலகம் முழுவதும் ஹோமியோபதி மருத்துவத்தின் பயன்பாடுகள் குறித்த புரிதல்களை ஊக்குவித்து வருகிறது.

உலக ஹோமியோபதி தினத்தை முன்னிட்டு ஆண்டுதோறும் மருத்துவர்கள், பொது நல அமைப்புகள், ஆர்வலர்கள் உள்ளிட்டோர் மூலம் பல்வேறு நிகழ்வுகள், கருத்தரங்குகள் உள்ளிட்டவைகள் நடத்தப்படுகின்றன. விரைவுரைகள், கருத்தரங்குகள், இலவச மருத்துவ பரிசோதனைகள், பொது விழிப்புணர்வு மற்றும் ஊடக நேர்காணல்கள் ஆகியவற்றின் மூலம் ஹோமியோபதி மற்றும் அதன் நன்மைகள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.

ஆக்கப்பூர்வமான மற்றும் சுகாதாரத்தை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் ஆகியவற்றின் மூலம் ஹோமியோபதி மருத்துவம் குறித்த நன்மைகள் பொது மக்களிடையே கொண்டு செல்லப்படுகின்றன. ஹோமியோபதி மருத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது, அனைவரும் அணுகக் கூடிய வகையில் மருத்துவ சிகிச்சைகளை மாற்றுவது, ஹோமியோபதியின் வளர்ச்சிக்கான சவால்கள் மற்றும் எதிர்கால யுக்திகளைப் புரிந்து கொள்வது ஆகியவை உலக ஹோமியோபதி விழிப்புணர்வு தினத்தின் நோக்கமாக கடைபிடிக்கப்படுகிறது.

அந்த வகையில் 2023 ஆம் ஆண்டு, உலக ஹோமியோபதி தினம் "ஒரு ஆரோக்கியம், ஒரே குடும்பம்" என்ற கருப்பொருளை மையமாக கொண்டு கடைபிடிக்கப்படுகிறது. ஏறத்தாழ 200 ஆண்டுகளுக்கும் மேலாக ஹோமியோபதி மருத்துவம் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பாரம்பரியம் மற்றும் இயற்கை சார்ந்த மருத்துவம் மற்றும் அலோபதி மருந்துகளுக்கு மாற்றாக ஹோமியோதி மருந்துகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

இதையும் படிங்க :SRH Vs PBKS : ஐதராபாத்தின் வெற்றிக் கதவை திறந்த திரிபாதி! பஞ்சாப்புக்கு முதல் சறுக்கல்!

ABOUT THE AUTHOR

...view details