தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இமானுவேல்சேகரன் குருபூஜையில் டிக்டாக் செய்தவர்கள் கைது - வைரல் வீடியோ - youths abuse the police on tiktok

விருதுநகர்: இமானுவேல்சேகரன் குருபூஜைக்குச் சென்றபோது, காவல்துறையினரைக் கேலி செய்து டிக்டாக் வீடியோ வெளியிட்ட இளைஞர்கள் நால்வரை காவல்துறையினர் கைது செய்தனர்.

tiktok video

By

Published : Sep 12, 2019, 10:35 PM IST

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி கரிசல்குளம் பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் இமானுவேல் சேகரன் குருபூஜைக்குச் சென்றபோது நரிக்குடி அருகே காவல்துறையினரை கேலி செய்து டிக்டாக் வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோவில் அந்த இளைஞர்கள் டிக்டாக்கில் ஈடுபட்டிருந்தபோது, பின்னால் காவலர் ஒருவர் வருவதைக் கூட உணராமல் டிக்டாக் செய்தனர்.

வன்முறையைத் தூண்டும் விதமாக செய்த டிக்டாக் வீடியோ

இதனையடுத்து, காவல்துறையினர் டிக்டாக் வீடியோ செய்த ஆறு இளைஞர்களில் K.கரிசல்குளத்தைச் சேர்ந்த வினித் (21), சந்தோஷ்குமார் (19), மற்றும் வேப்பங்குளத்தைச் சேர்ந்த மருது செல்வம் (20), ராமகிருஷ்ண மூர்த்தி (20) ஆகிய நான்கு பேரை, சிறிதுநேரத்தில் கைது செய்துள்ளனர். கைது நடவடிக்கை அறிந்த இருவர் தலைமறைவாகி உள்ளனர். அந்த இருவரையும் காவல்துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர். ஏற்கனவே ராமநாதபுரம் மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கும் நிலையில் கும்பலாக சேர்ந்துகொண்டு, வன்முறையைத் தூண்டும் விதமாக டிக்டாக் செய்தமைக்காக, இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பினர் தெரிவிக்கின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details