விருதுநகர் அருகே உள்ள மல்லாங்கிணறு கிராமத்தைச் சேர்ந்தவர் பில்டிங் காண்ட்ராக்டர் அக்னி ராமன் (31). இவர் இன்று காலை வழக்கம் போல, மாந்தோப்பு கிராமத்தில் உள்ள தனது சித்தப்பாவின் நினைவு இடத்திற்குச் சென்றுள்ளார். அப்போது, தனது இருசக்கர வாகனத்தில் திரும்பி வந்து கொண்டிருக்கும் போது, மர்ம கும்பல் ஒன்று, அவரை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி ஓடியது.
பின்னர், பலத்த காயமடைந்து ரத்தவெள்ளத்தில் இருந்த அவரை மல்லாங்கிணறு காவல் துறையினர் மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மேலும், முதலுதவி அளித்தும், உயிருக்கு ஆபத்தான நிலையில், அவரை மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.